தமிழகத்தில் இன்று
யோகம் பயில பிரம்மச்சர்யம் மிக அவசியம். பன்னிரண்டு ஆண்டுக் காலம் பிரம்மச்சரிய நெறியில் இருப்பவர்கள் மேதா நாடி என்ற ஒன்றைப்பெறுகிறார்கள், என்கிறார் பகவான் இராம கிருஷ்ணர். இதற்கு சாட்சி விவேகானந்தர். பிரம்மச்சார்யத்தால் மனிதன் பல ஞானம் பெற முடிகிறதுஎன்பதற்கு அவர் அடையாளம்.
"ஒரு மனிதனால் ஒன்று முடியும் என்றால் அது எல்லா மனிதனாலும் ஏன் முடியாது என்று முழங்கியவர் சுவாமி விவேகானந்தர். பிரம்மச்சர்யத்தின்மேதா நாடியில் மேன்மை கற்றவர் அவர்.
புலன் அடக்கம்,பிரம்மச்சர்யம், இவை ஒழுக்கக் கட்டுப்பாடு (moral ehtics) மட்டும் அல்ல. அதுவாழ்வியல்முறை ( life style ).
அதுவே எய்ட்சுக்கு தடுப்பு மருந்து என்பது சயின்ஸ் கண்ட உண்மை. அதுதான்சரியான வாழ்க்கைமுறை என்பது இந்தியப் பெருஞானம்.
இளைஞர்கள் கஷ்டமாக இருந்தாலும் இதைக் கடைபிடிப்பது அவசியம். பிரம்மச்சர்யஉடம்பைவிட உள்ளத்தை வலுப்படுத்தும், உண்மை, சக்தி.
இத்தகைய யோகியின் மனம்,காற்றில்லாத இடத்தில் வைத்த தீபம் போல ஆடாதுஅசையாது ஒளி வீசும் என்கிறது கீதை. இந்த யோகம் மூலம் மனத்தை வசப்படுத்தியபிறகு,உலக வாழ்வில் அடியெடுத்து வைக்கவும் தொழில்படவும் கீதைவற்புறுத்துகிறது. ஒரு யோகி,யோகி அல்லாதவன் இருவரும் தொழில்படுவது தவிர்க்கமுடியாதது. ஆனால் இருவர் தொழிலுக்கும் என்ன வேறுபாடு? யோகியன் செயலில்முழுமை
(perfection) பின் விளைவுகளால் பாதிக்கப்படாத சமநிலை இருக்கும்.
சராசரிமனிதன் செயலில் பதற்றம்,எதிர்பார்ப்பு அது பலனளிக்காத போதுசோர்வு,குழப்பம் அல்லது பலனளித்தால் அபரிமிதமான ஆனந்தம் அதன் விளைவானஇதய பலவீனம் எல்லாம் இருக்கும்.
உடலையும் உள்ளத்தையும் நம் வசம் வைத்துக் கொண்டு, தொழிலில் இருந்துவிலகாமல்,அதன் பலனில் இருந்து விலகி நன்றாகத் தொழிற்படுவதே கீதை காட்டும்பாதை.
யோகம் பயிலுவோர் விழிகளை மூடியும் மூடாமலும் நாசியைப் பார்த்தபடி இருக்கச்சொல்கிறது கீதை. ஏன்? விழிகளை முழுவதும் மூடிவிட்டால் தூக்கம் வந்துவிடும்.முழுவதும் திறந்து வைத்தால் உலக விஷயங்களில் ஈடுபட்டு விடுவோம். மூடியும்மூடாமலும் இருந்தால் விழிப்பும் அமைதியும் கை கூடும்.
நாள்தோறும் இப்படி,காலையும் மாலையும் தியானம் செய்வது அவசியம் என்கிறார்ஆச்சார்ய வினோபாபாவே.
ஆனால் ஒன்று. இப்படியோகம் பயில்வது வலது மூக்கையும் இடது மூக்கையும் மாறிமாறிப் பிடித்துக் கொண்டே இருக்கத்தானா இல்லை ... இல்லை... இல்லவே இல்லை.உடலை வலுப்படுத்தி, காற்றை நெறிப்படுத்தி, மனத்தை வசமாக்கிக் கொண்டால்அற்புதப்பணிகள் ஆயிரம் செய்யலாம்!
வசமான மனதை கடிவாளம் இட்ட முரட்டுக் குதிரை போல... இந்த யோகக்குதிரைகளின் பலமும் பணியும் அபாரமானவை. யோகம் கைவரப் பெற்றவர்எண்ணங்கள் நேரானவை. செயல்கள் சீரானவை. மனது சீரான மனிதர்களின் செயல்கள்மகத்தானவை.
எனவே செயல் ஒழிந்து போவது யோகியின் நோக்கம் அல்ல. சராசரி மனிதனின்வேலைத்திறனை விட பன்மடங்கு உ.யர்வாக, முழுமையாக வேலை பார்ப்பதேயோகியின் உள் நோக்கம்.
செயலை விட்டுவிட்ட துறவு, ஸந்யாஸம் கீதையின் செய்தி அல்ல. செயலைப்பற்றியஎதிர்பார்ப்பு,கற்பனை,படபடப்பு,பதட்டம் இவை ஏதும் இன்றி நூற்றுக்கு நூறுவிழுக்காடு வெற்றியாக வேலை பார்ப்பதே கீதையின் செய்தி.
எனவே மூச்சுப் பயிற்சி என்கிற பிராணாயாமம் செய்து மனம், உடல், ஆன்மா மூன்றின்முரண்பாடுகளைக் களைந்து ஒரு நேர்க் கோட்டில் வைப்போம், பிறகு ...?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications