For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

Mohan lalமோகன்லால். மலையாள சூப்பர்ஸ்டார்.

"வனப் பிரஸ்தம்" படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மூன்றாவது முறையாக தேசிய விருது வாங்கியுள்ளார். தமிழில்நேரடியாக நடித்தது ஒரு படம் (இருவர்) தான் என்றாலும் தமிழக சினிமா ரசிகர்களின் மனத்திலும் தனக்கென்றுதனி இடத்தை பிடித்துக்கொணடவர்.

மிக எளிமையாக சிரித்த முகத்தோடு மலையாளம் கலந்த தமிழில் அவர் பேசுவதை கேட்டுக்கொண்டேஇருக்கலாம்.

சென்னை எக்மோரில் உள்ள அவரது இல்லத்தில் அவரை சந்தித்தோம். இன்டியா இன்ஃபோ.காம்க்காகமோகன்லால் அளித்த ஸ்பெஷல் பேட்டி:

ரொம்ப சந்தோஷமா இருக்கேன். தேசிய அளவில் நடிகனாக மதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதற்காக அல்ல.

நான் நடித்த கதாபாத்திரத்திற்கு தேசிய அங்கீகாரம் கிடைத்தற்காக. "வான ப்ரஸ்தம்" படத்தில் நான் கதகளிநாட்டியக் கலைஞர் வேடம் ஏற்று நடித்தேன். நடிப்பது மிகவும் கஷ்டமாகவே இருந்தது. அதை சினிமாவில்வெளிப்படுத்துவது இன்னும் கஷ்டம்.

டைரக்டர் ஷாஜி கருணும், கதகளி மாஸ்டரும், மற்ற டெக்னிஷீயன்களும் எனக்கு கொடுத்த ஒத்துழைப்பையும்,ஊக்கத்தையும் நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். நாங்கள் அனைவரும் எடுத்துக்கொண்ட கடினமானஉழைப்புக்கு அடையாளம் இந்த தேசிய விருது.

அதோடு நான் மிகவும் சந்தோஷப்படும் இன்னொரு விஷயம், கேரள சினிமா உலகில் மூன்றாவது முறையாகதேசிய விருது பெறும் மூன்றாவது நடிகன் நான்.

முதலில் சுரேஷ்கோபி, அடுத்து மம்மூட்டி, மூன்றாவதாக எனக்கு கிடைத்துள்ளது. மலையாள சினிமா உலகத்திற்குநானும் என் நண்பர்களும் கடமைப்பட்டுள்ளோம்.

நடிக்கும் பொழுது, விருது கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு உங்களுக்கு இருந்ததா?

நிச்சயமாக இல்லை. நான் இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பித்த நாளில் இருந்து அப்படி ஒரு எண்ணம் எனக்குஏற்படவில்லை.

ஒரு வேளை நான் அப்படி நினைத்துக் கொண்டும், எதிர்பார்த்துக் கொண்டும் நடித்து கிடைக்காமல் போனால் அதுஒரு பெரிய ஏமாற்றமாகி விடலாம்.

பரிசும் பாராட்டும் திட்டமிட்டு பெறக்கூடாது. அது இயற்கையாகவும், எதார்த்தமாகவும் வர வேண்டும் என்றுநினைப்பவன் நான்.

குஞ்சிக்குட்டனன் கதாபாத்திரத்திற்காக, நீங்கள் எடுத்து பயிற்சிகள் சிரமங்கள் என்னென்ன என்றுசொல்ல முடியுமா?

பொதுவாக, நான் எந்த வித்தியாசமான கேரக்டரில் நடித்தாலும் அந்த நேரத்தில் டைரக்டர் சொல்லிக் கொடுத்துஎதிர்பார்க்கிறபடி நடிப்பது தான் என்னோட வழக்கம்.

வான ப்ரஸ்தம், ஒரு கதகளி நடன கலைஞரின் வாழ்க்கையைப் பற்றியது. அதற்காக கொஞ்சம் பயிற்சி தேவைஎன்பதை நான் உணர்ந்தேன்.

Mohan lalகதகளியின் அடிப்படை, தாத்பரியம் எனக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்வது என்பது இந்த வயதில்சாத்தியம் இல்லை. அதனால் இந்தக் கலையின் சிறப்பாக கருதப்படும் ஸ்டெப்களை கவனமாகப் பார்த்து பார்த்துகற்றுக்கொண்டேன்.

இந்தக் கலைஞர்களின் உணர்வுகளை பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள முயற்சித்தேன். ஒரு கதகளி மாஸ்டர்வீட்டுக்கு வந்து எனக்கு பயிற்சி கொடுத்தார். கதகளியில் முக்கிய அங்கம் வகிக்கும் மேக்கப் மற்றும் உடைகளில்நான் அதிக கவனம் எடுத்துக் கொண்டேன். நடிக்கிற போது கதகளி மேக்கப் உடைகளுடன் சுமார் பன்னிரெண்டுமணிநேரம் கூட இருந்திருக்கிறேன். அது எவ்வளவு கஷ்டமானது என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டுமேபுரியும்.

கதகளி மாஸ்டர்களே என்னைப் பார்த்து என் ஆர்வத்தையும் நான் படும் கஷ்டங்களையும் பார்த்துஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு எல்லாம் இந்த தேசிய விருது எனக்கு இப்பொழுது ஆறுதலாகஉள்ளது.

அம்பேத்கார், வடக்கன் வீரகதாவைப் போல மம்மூட்டி உயிருடன் வாழ்ந்தவர்களைப் பற்றியும், சரித்திரபுருஷர்களைப்பற்றிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். நீங்கள் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில்நடிக்கவில்லையே ?

நானாக இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று திட்டமிடுவதில்லை. நடிக்க ஆர்வம் காட்டுவதும்இல்லை.

எனக்கு கிடைக்கிற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை,லட்சியம். நீங்கள்சொல்கிற படி சரித்திர புருஷர்கள் வாழ்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க அழைப்பு வந்தால் நிச்சயமாக நடிப்பேன்.

கிடைத்ததை சிறப்பாக செய். எதையும் திட்டமிட்டு காத்திருக்காதே என்பது நான் சினிமா உலகிற்கு வந்துகற்றுக்கொண்ட பாடம். அனுபவமொழி.

இருவர் படத்திற்குப்பிறகு தமிழில் நடிக்கவில்லையே ஏன்?

நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வந்துகொண்டுதானிருக்கிறது. இந்தி தெலுங்கு படங்களிலும் நடிக்கிற வாய்ப்புகள்வருகிறது.

நான் மலையாள படங்களில் நடிப்பதில் திருப்தியாகவே இருக்கிறேன். நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தநான் இப்பொழுது மலையாளப்படங்களை தயாரித்தும் வருகிறேன். அதனால் எனக்கு வேறு மொழிகளில் கவனம்செலுத்தும் அளவுக்கு நேரம் காலம் கிடைப்பதில்லை.

வாழ்க்கையில் இன்னும் நிறைவேறாத லட்சியம் என்று ஏதேனும் இருக்கிறதா?

நான் நடிக்க வந்த காலத்திலிருந்து என் மனதிற்குள் பூட்டி வைத்திருக்கும் ஒரு கனவு ஒன்று உண்டு. பெர்ஃபார்மிங்ஆர்ட்ஸ் ( PERFORMING ARTS). அதாவது நடிப்புக்கலை என்று சொல்லலாம். இதைப் படிக்க உலக அளவில்கல்லூரிகள், பல்கலைக்கழகத்தை தொடங்க வேண்டும் என்பது தான் அது.

அதற்கான ஆரம்ப வேலைகளில் இறங்கியுள்ளேன்.கல்யாண மண்டபம், ஹோட்டல் என்று பலரும்கட்டிவருகிறார்கள். என்னை வாழவைத்த நடிப்புக் கலைக்காக இந்த ஒரு திட்டத்தை நான் செய்ய இருக்கிறேன்.அதற்கு மூத்த நடிகர், நடிகையர்கள் மற்றும் இயக்குநர்களின் ஆதரவு எனக்கு தேவை என்றார் மோகன்லால்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X