தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கபில், அஸார் பற்றிய பாடங்களுக்கு "கல்தா

அகமதாபாத்:

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதை அடுத்து கபில் தேவ் மற்றும் அஸாருதீன் தொடர்பானபாடங்களை உடனே நீக்க குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.

கிரிக்கெட் உலகில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த கபில் தேவ் மற்றும் அஸாருதீன் குறித்து 10-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புப் புத்தகங்களில்பாடமாக குஜராத் அரசு வைத்துள்ளது.

10-ம் வகுப்பு ஆங்கில துணைப் பாடப் புத்தகத்தில் "தி வேர்ல்ட் ஆஃப் கபில் தேவ்" (கபில் தேவின் உலகம்) என்ற பாடத்தையும், 8-ம் வகுப்புபுத்தகத்தில் யார் இவர் என்ற பகுதியில் அஸாருதீன் படத்தையும் குஜராத் அரசு பாடமாக வைத்துள்ளது.

சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன. குறிப்பாக கபில் தேவ் மற்றும்அஸாருதீன் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

இது தவிர கபில்தேவ், அஸாருதீன் உள்பட பல கிரிக்கெட் வீரர்களுடைய வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

இதையடுத்து பாடப் புத்தகங்களில் உள்ள கபில் தேவ் மற்றும் அஸாருதீன் பற்றி பாடங்களை நீக்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாகசம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கும் அப் பாடங்களை உடனடியாக நீக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

இத் தகவலை குஜராத் கல்வி அமைச்சர் ஆனந்திபென் பாட்டீல் தெரிவித்தார். இந்த ஆண்டு பாடத் திட்டத்தில் கபில் தேவ் மற்றும் அஸாருதீன் குறித்தபாடங்கள் பயிற்றுவிக்கப்படாது.

தேர்விலும் அப் பாடங்கள் குறித்த கேள்விகளும் கேட்கப்படாது. அடுத்த கல்வி ஆண்டில் வெளியாகும் புத்தகத்தில் அப் பாடங்கள் இடம் பெறாதுஎன்றார் அமைச்சர்.

கபில்தேவ் மற்றும் அஸாருதீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் இருந்தாலும், அரசின் இந்த முடிவு சரியானதுதான். ஏனெனில் கூறப்பட்டகுற்றச்சாட்டுகளில் சில நிரூபிக்கப்பட்டுள்ளன. நிரூபிக்கப்பட்டு வருகின்றன என்றார் ஆனந்த்பென் பாட்டீல்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+