For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

மீண்டும் வந்த வீரப்பன்

பெங்களூர்:

Sandol Veerappanகன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரைக் கடத்தியுள்ளதன் மூலம் மீண்டும் தனதுமுரட்டு-முட்டாள்தனத்தைக் காட்டியுள்ளான் சந்தனக் கடத்தல் வீரப்பன்.

40 ஆண்டுகளுக்கு முன்பு சிறு வயதில் யானை வேட்டை மூலம் தனது வனவாழ்க்கையைத் துவக்கி வீரப்பனால் கொல்லப்பட்ட தமிழக, கர்நாடகத்தைச்சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 100-க்கும் மேல்.

இரு மாநிலத்திற்கும் தீராத தலைவலியாக இருந்து வரும் வீரப்பனைப் பிடிக்க இதுவரைஎடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் வெற்றி பெறவில்லை. இரு மாநில காவல்துறையும்சேர்ந்து கூட்டாக வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படை அமைத்தும் கூட வீரப்பனின்கொட்டம் இதுவரை அடங்கவில்லை.

அடிக்கடி யாரையாவது கடத்திச் செல்வதும், கோரிக்கை எதையாவது வைத்துப்பின்னர் அவர்களை விடுவிப்பதும் வீரப்பனின் வாடிக்கையாகி விட்டது. இப்போதுகன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தியுள்ளான் வீரப்பன்.

1955-ம் ஆண்டு ஒரு யானையைச் சுட்டுக் கொன்றான் வீரப்பன். அப்போதுஅவனுக்கு வயது 10 மட்டுமே. 1955-லிருந்து, 80-ம் ஆண்டுக்குள் மொத்தம் 300யானைகளை வீரப்பன் சுட்டுக் கொன்று தந்தங்களை எடுத்துள்ளான் வீரப்பன்.

1987-ம் ஆண்டு முதன் முதலாக தனது மனித வேட்டையைத் துவக்கினான் வீரப்பன்.தமிழக வன அதிகாரி சிதம்பரம், வீரப்பன் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுக்கொல்லப்பட்டார்.

89-ல் வீரப்பனின் எதிரிக் கும்பலைச் சேர்ந்த 5 பேரை வீரப்பன் கும்பல் கொன்றது.அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கர்நாடக வனக் காவலர் மோஹனய்யா வீரப்பன்கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1990-ம் ஆண்டு சில்வக்கல் வனப் பகுதியில், வீரப்பன் கும்பலைப் பிடித்த போலீஸார்அவர்களிடமிருந்து ரூ. 1.5 கோடி மதிப்புள்ள சந்தனக் கட்டைகளைப் பறிமுதல்செய்தனர்.

அதே ஆண்டு ஏப்ரல் மாதம் வீரப்பனைப் பிடிப்பதற்காக கர்நாடக அரசு சிறப்புஅதிரடிப்படையை நியமித்தது. 1991-ம் ஆண்டு மே மாதம் முதல் இந்த வீரர்களின்நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. ஒரே ஆண்டில் 100 வீரப்பன் கூட்டாளிகள்பிடிக்கப்பட்டனர். இந்த நிலையில் போலீசுக்குத் தகவல் கொடுத்த கட்ட நாயக்என்பவரை வீரப்பன் கொடூரமாகக் கொன்றான்.

1991-ம் ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடக துணை வனப் பாதுகாவலரும், சிறப்புஅதிரடிப்படையின் துணைத் தலைவருமான பி.ஸ்ரீனிவாஸ் தலை துண்டிக்கப்பட்டுக்கொல்லப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டு மே மாதம், கர்நாடகத்தின் ரமாபூர் போலீஸ்நிலையத்தில், 5 காவலர்களை வீரப்பன் கும்பல் சுட்டுக் கொன்றது.

1992-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீரப்பனின் நெருங்கிய கூட்டாளி, குருநாதனைஅதிரடிப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதே ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதிபோலீஸ் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சகீல் அகமதுஆகியோர் உள்பட 6 போலீஸாரை வீரப்பன் சுட்டுக் கொன்றான்.

1993-ல் வீரப்பன் தனது தாக்குதலில் ஜெலட்டின் குச்சிகளை முதன் முதலில்பயன்படுத்தினான். அந்த ஆண்டு நடத்திய ஒரு தாக்குதலில் தமிழக அதிரடிப்படைகண்காணிப்பாளர் கோபால கிருஷ்ணன் உள்பட 7 பேர் காயமுற்றனர்.

1993-ம் ஆண்டு கர்நாடக சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 6 போலீஸ்காரர்களைவீரப்பன் கும்பல் சுட்டுக் கொன்றது. போலீஸால் திருப்பிச் சுட்டதில் வீரப்பன்கும்பலைச் சேர்ந்த 6 பேர் இறந்தனர்.

1993-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், மொத்தம் ஆறு வீரப்பன் கூட்டாளிகளைஅதிரடிப் படை போலீஸார் சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து செப்டம்பர் மாதம் நான்குவீரப்பன் கூட்டாளிகள் கொல்லப்பட்டனர்.

பாலார் அருகே வந்து கொண்டிருந்த போலீஸ் குழுவை வெடிகுண்டு வைத்து வீரப்பன்கொன்றான். இதில் போலீசுக்குத் தகவல் கொடுத்த 15 பேர் உள்பட 22 பேர்உயிரிழந்தனர்.

மே மாதம் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும், அவரது மகளும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

சொந்த மகளைக் கொன்ற கொடூரன்:

1993-ம் ஆண்டு ஜூலை மாதம் வீரப்பன் மிகக் கொடூரமான செயலைச் செய்தான்.போலீஸார் அவனைத் தேடும் வேட்டையில் இருந்தபோது, தன்னுடன் இருந்த மகள்அழுதால் பிடித்து விடுவார்களோ என்று பயந்த வீரப்பன், மகளின் கழுத்தை நெரித்துக்கொன்றான். அந்த வேட்டையின்போது 6 வீரப்பன் கூட்டாளிகளை போலீஸார் கைதுசெய்தனர்.

இந்த நிலையில், 1994-ம் ஆண்டு கோவை அருகே வீரப்பன் கூட்டாளிகள் மூன்று பேர்போலீஸில் சரண் அடைந்தனர். இதுவே வீரப்பன் தரப்பில் முதல் சரண் ஆகும். அந்தஆண்டு அக்டோபர் மாதம், தமிழகத்தின் கடசாலு என்ற பகுதியில், 5 பழங்குடியினரைவீரப்பன் கும்பல் சுட்டுக் கொன்றது.

அந்த ஆண்டு டிசம்பர் மாதம், தமிழக டி.எஸ்.பி. சிதம்பர நாதன் மற்றும் ஆறு பேரைவீரப்பன் கும்பல் கடத்திச் சென்றனர். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில்,காட்டை விட்டு வெளியே வந்த வீரப்பனின் நண்பன் பேபி வீரப்பன் கைதுசெய்யப்பட்டான். பின்னர் வந்த வீரப்பனின் தம்பி அர்ஜூனும் கைதுசெய்யப்பட்டான். இந்த நிலையில் கடத்தி வைக்கப்பட்டிருந்த அனைவரும் வீரப்பன்கும்பலிடமிருந்து தப்பி வந்தனர்.

1995-ம் ஆண்டு ஜனவரி மாதம் மேலும் 3 வீரப்பன் கூட்டாளிகள் போலீஸில் சரண்அடைந்தனர். அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி பீதரகுளியில் ஐந்துகிராமத்தினரை வீரப்பன் கும்பல் கொன்றனர். அதற்கு அடுத்த நாள், புனஜனூரில் 5பேரை வீரப்பன் கும்பல் சுட்டுக் கொன்றது.

அதே ஆண்டு செப்டம்பர் மாதம் வீரப்பனின் தம்பி அர்ஜூனன், கூட்டாளிகள்சேத்துக்குழி ரங்கசாமி, ஐயன்துரை ஆகியோர் போலீஸ் வேனில் விசாரணைக்குச்சென்று கொண்டிருந்தபோது, சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

1997-ம் ஆண்டு வீரப்பனின் வேட்டை முடிவுக்கு வரும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.தான் சரண் அடையத் தயார் என்று வீரப்பன் அறிவித்தான். நக்கீரன் பத்திரிகைஆசிரியர் கோபால் மூலம் இதை அவன்ம முதன் முதலாக அறிவித்தான்.

இந்த நிலையில், 97-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வீரப்பனின் கூட்டாளி பேபி வீரப்பனின்உடல் அரோக்காடு காட்டுப் பகுதியில் மீட்கப்பட்டது. இந்த நிலையில் மறுபடியும்தனது கடத்தல் நாடகத்தைத் தொடங்கினான் வீரப்பன்.

1997-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி மைசூர் காட்டுப் பகுதியிலிருந்து 10 பேரைக்கடத்தினான் வீரப்பன். வீரப்பன் சரண் அடைவதை ஏற்றுக் கொள்வதாக தமிழக,கர்நாடக மாநில அரசுகள் ஜூலை 14-ம் தேதி அறிவித்தன. பல்வேறு குழப்பத்திற்குப்பிறகு கடத்திய அனைவரையும் விடுவித்தான் வீரப்பன்.

அக்டோபர் 8-ம் தேதி பிரபல புகைப்படக் கலைஞர் கிருபாகர், சேனானி, ஏழுசுற்றுலாப் பயணிகள் உள்பட 7 பேரை வீரப்பன் கடத்திச் சென்றான். 14 நாட்கள்கழித்தே அவர்களை விடுவித்தான்.

1998-ம் ஆண்டு ஜுலை 19-ம் தேதி வீரப்பனின் கூட்டாளி மாதேஷ் சத்தியமஙகலம்அருகே போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அதன் பிறகு கடத்தலில் ஈடுபடாமல் அமைதி காத்து வந்த வீரப்பன், இன்று, கர்நாடகமக்கள் மரியாதை வைத்திருக்கும் நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றுள்ளான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X