இந்த வாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெற உள்ளது.

இத் தேர்தலில் தலைவர் பதவிக்கு அ.செ.இப்ராஹிம் ராவுத்தர், கேயார், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு ராவுத்தர் தலைமையில் ஒரு அணியாகவும், கேயார் தலைமையில் ஒருஅணியாகவும் தயாரிப்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நடிகர் சங்கத் தேர்தலைப் போல் இல்லாமல் இந்த தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் அனைத்துப் பதவிகளுக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான வியாழக்கிழமை, செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பித்திருந்த ஆர்.பி. சவுத்ரி, கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி விவரம்:

ராவுத்தர் அணி:

தலைவர் - இப்ராஹிம் ராவுத்தர், துணைத் தலைவர்கள் - கோவைத்தம்பி, ஏ.எல். அழகப்பன், செயலாளர்கள்- கே.எஸ். சீனிவாசன், சித்ரா லட்சுமணன்,பொருளாளர் - கே. முரளிதரன்.

செயற்குழு உறுப்பினர்கள் - ஜி. தியாகராஜன், நடராஜன், எம். காஜா மொய்தீன், சங்கிலி முருகன், எம். கஃபார், மோகன் நடராஜன், எஸ்.சந்திரபிரகாஷ் ஹென்றி, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.எஸ்.சக்ரவர்த்தி, என். விஷ்ணுராம், எல்.கே. சதீஷ், புஷ்பா கந்தசாமி, எச்.முரளி, எம். ராஜாராம்.

கேயார் அணி:

தலைவர் - கேயார், துணைத் தலைவர்கள் - பஞ்சு அருணாசலம், பிரமிட் நடராஜன், செயலாளர்கள் - கே. விஜயகுமார், பிரபாகரன், பொருளாளர் -எஸ்.எஸ். துரைராஜ்.

செயற்குழு உறுப்பினர்கள் - ஏ.எம். ரத்னம், ஆர்.கே. செல்வமணி, கே.டி.குஞ்சுமோன், வி.சேகர், வி.சி.குகநாதன், கே.ஆர். பிரபு, பி.எல். தேனப்பன்,கே. பாலு, கோவை முருகேசன், பி. கண்ணப்பன், ஆர். மாதேஷ், கே.நந்தகோபால் செட்டி, கே. சுபாஷ், ஆலயம் ஸ்ரீராம், கே. மதனகோபால் நாயுடு,ஏ.என். சுந்தரேசன்.

தலைவர் பதவிக்கு நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு கே.ஏ.நடராஜன்,ஆர்.இ.மகாலிங்கம், எஸ்.குமார், கே.வி. குணசேகரன், ஜோதி பிரசாத், பவித்ரன் ஆகியோரும் சுயேட்சையாகப் போட்டியிடுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+