வீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கோருகிறார் ராமதாஸ்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு வழங்கவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் எஸ்.ராமதாஸ் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் அருகே உள்ள அச்சிறுபாக்கத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரபல கன்னட நடிகர்ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றுள்ளான். அவர்களை மீட்க தமிழக, கர்நாடகஅரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
நடிகர் ராஜ்குமார் எந்த ஆபத்தும் இன்றி விரைவில் வீடு திரும்புவார் என்று நம்புகிறேன். வீரப்பன் பிரச்சினைக்காககர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்படுத்துவது நல்லதல்ல.
பல்வேறு பிரச்சினைகளில் வீரப்பன் விவகாரத்தையும் ஒன்றாகச் சேர்த்து தமிழர்கள் மீது கர்நாடக அரசுவெறுப்புணர்ச்சியைக் காட்டி வருகிறது.
வீரப்பன் பிரச்சினை மீண்டும் எழாமல் இருக்கவேண்டும் என்றால் அவனுக்குப் பொது மன்னிப்புவழங்கவேண்டும். உலக நாடுகள் எல்லாம் தீவிரவாத அமைப்புகளுடன் பேச்சு நடத்தி வருகின்றன.
காஷ்மீர் தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்த மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. அதே போல் திருந்தி வாழநினைக்கும் வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு வழங்கவேண்டும். அதில் தவறு ஏதும் இல்லை என்றார் ராமதாஸ்
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!