For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆமை போல் அடங்கு

By Staff
Google Oneindia Tamil News

சேதம் அடையக் கூடிய ஐந்து உறுப்புகளையும் பாதுகாப்பான, வலிய ஓட்டுக்குள் ஆமை இழுத்துக் கொள்வது போல உள்ளச் சமநிலை என்ற பாதுகாப்பில்ஐம்புலன்களும் ஒடுங்க வேண்டும் என்று சொல்கிறது கீதை.

பின்னாளில் மகாகவி பாரதி பக்தி உடையார் காரியத்தில் பதறார் என்று சமூகத்தின் செவிகளில் தேன் பாய்ச்சிய கருத்தும் இதுவே.பதறிய காரியம் பாழ்என்று காலம் எழுதிய கவிதை. அதுதான் பழமொழி. பிடித்தது உண்டே, உணர்ச்சி மேலோங்கிய படபடப்பு. பரபரப்பு, காரியத்தின் மேன்மையைக்கெடுத்துவிடுகிறது.

பெரும்பாலும் உணர்ச்சி, தவறான முடிவுகளில் தள்ளி விடுகிறது. கோபம், பச்சதாப உணர்ச்சிகளின் தூண்டுதலால் எடுக்கப்பட்ட முடிவுகள்தாம் நம் வாழ்வின்சரிவுக்கான காரணங்கள்.

சம நிலையில் எடுக்கப்பட்ட முடிவுகள், சமவெளியில் உருவான நாகரீகம் போல....பதற்றம் இல்லாத மனோ நிலையில் விளைந்த தீர்மானங்கள்தீர்க்கமானவை. சத்தியமானவை. நியாயமானவை. சமூகத்திற்கு அவசியமானவை.

திருப்பதி பெருமாளுக்கு பூக்கட்டும் திருப்பணி செய்தவர் அனந்தாழ்வார் என்கிற அடியவர். நாராயணா என்னும் நாமத்தை நாவால் தொடுத்து, நந்தவனத்துநாள் மலரை நாரால் தொடுத்து, நற்பணியாற்றிய, நம்பியே அவர் அனந்தன். அனந்தன் என்றால் பாம்பைக் குறிக்கும்.

ஆதிசேடன் பெயர் தாங்கிய அடியவரே அனந்தாழ்வார். ஒருநாள் பூக்களைத் தொடுக்கும் பக்திப் பணி புரிந்து கொண்டிருந்தபோது பாம்பு அன்று அவர் விரலைத்தீண்டியது. பதறாமல் பணியைத் தொடர்ந்தார். பூமாலை கட்டி பெருமாள் திருத் தோளில் சாற்றப் போனார்.

பெருமாள் பதறினாராம். "பாம்பு.. பாம்பு... அனந்தா .. பாம்பு கடித்து விட்டது என்றதும் நிதானமாக அனந்தனும், பாவம் கடித்த பாம்புக்குவிஷம் அதிகம் என்றால் கைங்கர்யம் அங்கே. கடியுண்ட பாம்புக்கு விஷம் அதிகமானால் கைங்கர்யம் இங்கே. பின் என்ன கவலை? என்றார்.

ஒரு வேளை, கடித்த பாம்பு விஷம் அதிகம் உடையது என்றால் மரணம் வரும். மரணம் வந்தாலும் கவலை இல்லை. இறந்தால் வைகுந்தம்போகலாம், அங்கும் மாலை கட்டி பெருமாளுக்கு இதே தொண்டு செய்யலாம்.

கடியுண்ட பாம்பாகிய (அனந்தன் என்றால் பாம்பு) தமக்கு விஷம் அதிகம் என்றால் மரணம் வராது. இறக்கவில்லை என்றால் இதே மாலைகட்டும் திருப்பணியை இங்கேயே தொடர்ந்து செய்யலாம். என்ன தெளிவு? என்ன உறுதி? மரணத்தைப் பற்றி கவலைப்படாத மகாஞானி அவர்.

நம்மவர்களில் பலர் கஷ்டங்களால் சாவதை விட கஷ்டங்களைப்பற்றி கற்பனை செய்தே சாகிறார்கள். ஆபத்துக்களை விட ஆபத்துப் பற்றிய கவலைகள்ஆபத்தானவை.

ரயில் வேகமாக ஓடிக் கொண்டே இருந்தது. அதில் எதிர் எதிராக இருவர் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தனர். ஒருவர் தமதுகையை வெளியே ஜன்னல் வழியே தொங்க விட்டிருந்தார்.

திடீரென்று அவரது விலை உயர்ந்த கைக் கடிகாரம் கழன்று விழுந்து விட்டது. அவர் பதறித் துடித்து படாதபாடுபட்டார். ஜன்னல் வழியே வேடிக்கைபார்ததுக் கொண்டு வந்த மற்றொருவரோ அவர் துயரத்தில் சிறிதும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை.எந்த வித சலனமும் இன்றி வெளியில் வேடிக்கைபார்த்துக் கொண்டு பயணம் செய்கிறார்.

அடுத்த நிலையத்தில் ரயில் நின்றதும், அவர் ரயில் நிலைய அதிகாரியை அழைத்து இங்கிருந்து இத்தனையாவது தந்திக் கம்பத்துக்கு அருகில் கடிகாரம்கிடக்கிறது. அது என் எதிரில் உள்ள சக பயணியுடையது என்றார். அதைக் கேட்டதும் அந்தப் பயணியின் முகம் மலர்ந்தது. தான் தவிக்கும் போது அவர்வெளியே தநத்திக் கம்பங்களை எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார் என உணர்ந்து கொண்டார்.

அந்த ஸ்திதப்பிரஞ்ஞன் வேறு யாருமல்ல அண்மைக்காலம் வரை நம்மோடு வாழ்ந்த மூதறிஞர் ராஜாஜி.

இதுதான் சமநிலை. இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.

(தொடரும்)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X