• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல்வன்

By Staff
|

டுத்த காரியம் வெற்றியாக முடிய வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. அந்த ஆசையை நிறைவேற்றி வைக்கும் கடவுள் விநாயகரே என்றநம்பிக்கை ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலைத்திருக்கிறது.

தமிழரின் வழிபாட்டில் விநாயகர் வழிபாடு தொன்மையானது. சங்க இலக்கியங்களில் விநாயகர் பற்றிய குறிப்புகள் இல்லை. உரையாசிரியர் என்றுஅழைக்கப்படும் இளம்பூரணார் தனது செய்யுள் உரையில் தன்தோள் நான்கில் என்ற அகவலை எடுத்தாள்கிறார்.

விநாயகர் வழிபாட்டில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வழிபாடு உலகெங்கும் பரவியுள்ளது.

அமைவிடம்:

பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. காரைக்குடியிலிருந்து குன்றக்குடி வழியாகத் திருப்பத்தூர்செல்லும் சாலையில் சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இத்தலத்தின் கிழக்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் குன்றக்குடியும், வடமேற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வயிரவன்பட்டியும் உள்ளன.

ஊர்ப் பெயர்க்காரணம்:

பிராமி மொழிக் கல்வெட்டுள்ள குடைவரையான பிள்ளையார்பட்டி, மருதங்குடி, திருவீங்கைக்குடி, எக்காட்டூர், இராசநாராயணபுரம் என்ற பெயர்களால்கல்வெட்டுகளில் ஆளப்பட்டுள்ளன.

Kalvettu கற்பக விநாயகரின் திருவுருவத்தைச் செதுக்கிய, தச்சனின் பெயர் எக்காட்டூர் கோன் பெருபரமணன் எனச் சுட்டப்படுகிறது. இது நாட்டுக் கோட்டைநகரத்தார்களில் ஒன்பது நகரக் கோயில்களில் ஒன்றாகும்.

இங்குள்ள பிள்ளையார் உலக மக்களின் நன்மைக்காகச் சிவலிங்கத்தை கையில் வைத்துத் தவம் புரியும் முகமாக வீற்றிருப்பதால் இவ்வூர் பிள்ளையார்பட்டிஎன அழைக்கப்படுகிறது.

இறைவன்- பெயர்க்கரணம்:

இங்குள்ள விநாயகர் கற்பக மரம் போலக் கேட்ட வரம் அனைததும் நல்குவதால் கற்பக விநாயகராகிறார். ஆனால் கல்வெட்டுக்களில் இவர், தேசிவிநாயகப் பிள்ளையார் என்றே சுட்டப்படுகிறார்.

தலத்தின் தொன்மை:

உலகில் காணப்படும் விநாயகர் சிற்பங்களுள் காலத்தால் முந்தியதாகவும், உலகத்தின் முதல் பிள்ளையாராகவும் அமைந்திருப்பது பிள்ளையார்பட்டி அருள்மிகுகற்பக விநாயகரின் சிறப்பாகும்.

இங்குள்ள விநாயகர் இரு கைகளுடன் காணப்படுகிறார். இதனை அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானில் உள்ள விநாயகர் இரண்டு கைகளுடன் திகழ்கிறார். இரண்டுகைகளை உடைய விநாயகரை வேறு எங்கும் காண இயலாது.

தமிழகத்தில் விநாயகர் வழிபாடு கி.பி. ஏழாம் நூற்றாண்டில், வாதாபி கொண்ட போரில் சிறுத்தொண்டர் கொண்டு வந்த விநாயகரின் உருவத்திற்குப் பின்னரேதோன்றியது என்ற கருத்து பரவலாக உள்ளது.

ஆனால் இக்கருத்து ஏற்புடையதன்று. சாளுக்கியரின் விநாயகர் வழிபாடு வடதமிழகம் வழியாகப் பாண்டிய நாட்டில் பரவியது. பாண்டியர் குடைவரைகளில்விநாயகர் இடம் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.

திருக்கோயில் அமைப்பு:

Maruthamaramகற்பக விநாயகர் திருவீசர் திருக்கோயில் வடக்கு நோக்கிய சன்னதியை உடையது. மலையைக் குடைந்து இக் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. கருவறையில்விநாயகர், ஆறடி உயரத்தில் அமைந்திருக்கிறார்.

மருதீசரி திருக்கோயில் கிழக்கு நோக்கியது. இறைவன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். கருவறையை அடுத்து அர்த்த மண்டபம் உள்ளது. மகாமண்டபத்திற்கு முன்பாக இறைவி வாடா மலர் மங்கை, தெற்கு நோக்கியவாறு அருள் பாலிக்கிறாள். இறைவன் சன்னதிக்குப் பின் தலவிருட்சமானமருதமரம் உள்ளது.

கற்பக விநாயகப் பெருமான் ஆலயத் திருவாயில் முன்பு திருக்குளம் அமைந்துள்ளது.தல விருட்சமான மருதமரம்

நாள் வழிபாடு:

பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் நாள்தோறும் 5 கால பூசைகள் நிகழ்கின்றன. திருஅனந்தல் காலை 6 மணி முதல் 6.30 மணிவரையிலும், உச்சி காலம் காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும், சாயரட்சை மாலை 5 மணி முதல் 6.30 மணி வரையிலும், அர்த்த சாமம் இரவு 8மணி முதல் 9 மணி வரையிலும் நடைபெறுகின்றன.

திருவிழாக்கள்:

ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகருக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். இரவு, வெள்ளி மூஞ்சூர் வாகனம் வலம் வரும். நிகழ்ச்சிஉட்பிரகாரத்தில் நடைபெறும்.

திருக்கார்த்திகை மற்றும் திருவாதிரை திருநளான்று விநாயகருக்கும், மருதீசருக்கும், நடராசருக்கும் சிறப்பு பூசைகளும் அபிஷேக ஆராதனைகளும் நிகழும்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more