வேலைக்காரப் பெண்ணை அடித்த தமிழ்ப் பெண் கைது
சிங்கப்பூர்:
தன்னிடம் வேலை செய்த இந்தோனேசிய பணிப் பெண்ணை இரண்டாவது முறையாகஅடித்ததற்காக, சிங்கப்பூர் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. அவரது வீட்டில் இந்தேனேசியாவைச் சேர்ந்தஇளமியாதி என்ற பெண் பணி புரிந்து வந்தார். சம்பவத்தன்று ஏதோ ஒரு கோபத்தில்,சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கடாயை எடுத்து இளமியாபதியின் தலை மற்றும்முதுகில் மகாலட்சுமி அடித்துள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து நீதிமன்றத்தை அணுகிய இளமியாபதி, மகாலட்சுமி மீது புகார் கொடுத்தார்.இளமியாதியை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டு கடாய் மூலம் முகத்திலும்,முதுகிலும் மாறி, மாறி அடித்துள்ளார். பின்னர் அவரை எட்டி உதைத்து தலை முடியைப்பிடித்து இழுத்து, ஏர் கண்டிஷனரின் ரிமோட் கண்ட்ரோலால் அடித்தார் எனப் புகாரில்கூறப்பட்டது. இதையடுத்து மகாலட்சுமியை போலீஸார் கைது செய்தனர்.
இளமியாதி, மகாலட்சுமியிடம் 7 மாதங்களாக வேலை பார்த்து வருகிறார். வருகிறார்.முதலில், தன்னை குழந்தைகளின் ஆடைகளையும், வீட்டு உரிமையாளரின் ஆடைகளையும்ஒன்றாக வைதத்திருந்ததற்காக அடித்தார். அதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு ஒரு ஆணுடன்பேசியதற்காக அடித்தார் என மகாலட்சுமி மீது இளமியாதி புகார் கூறியிருந்தார்.
நீதிபதி சீ கீ ஆன் தனது தீர்ப்பில், 31 வயதான மகாலட்சுமி இதே போன்ற தாக்குதல்நடவடிக்கையில் மீண்டும் ஈடுபடக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு அவருக்கு 12மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது என்றார்.
ஏற்கனவே, 1997-ம் ஆண்டு வீட்டில் வேலை செய்த வேலைக்கார பெண் ஒருவரைஅடித்தார் என்பதற்காக மகாலட்சுமி தண்டிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications