இந்தியாவுக்கு 20 லட்சம் கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் தேவை!
டெல்லி:
வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் தகவல் தொழில்நுட்ப மற்றும் கம்ப்யூட்டர்என்ஜீனியர்கள் குறித்து கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்து செல்லும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள்,என்ஜீனியர்கள் குறித்த டேட்டா பேஸ் உருவாக்கவும் மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இந்திய தகவல் தொடர்புத் துறைக்கு அதிக தேவை இருப்பதால் அதுகுறித்து மத்தியஅரசு அக்கறை காட்டத் துவங்கியுள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்பப்பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு புற்றீசல் போல போவதால், அவர்களைக்கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறைக்கான சிறப்பு நடவடிக்கைக் குழு பிரதமருக்குக்கொடுத்துள்ள பரிந்துரைகளில் இதுவும் ஒன்றாகும். இந்தக் குழுவின் கூட்டம், மத்தியமனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில்டெல்லியில் நடந்தது. இதில், பேசிய ஜோஷி, பயப்படும் அளவுக்கு நிலைமைமோசமாகவில்லை. இருப்பினும் எந்தவகையான புகார்கள் எழுவதையும் அனுமதிக்கநாங்கள் தயாரில்லை.
தகவல் தொழில்நுட்ப அமைச்சரவையின் கணிப்புப்படி, இந்தியாவுக்கு 20.3 லட்சம்தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களில் 2 லட்சம்பேர் சாப்ட்வேர் உற்பத்திக்கும், 5,77,000 பேர் தகவல் தொழில்நுட்பப் பணி மற்றும்ஈ.பிசினஸுக்கும், 10.2 லட்சம் பேர் தகவல் தொழில்நுட்பம் தொடர்பானபணிகளுக்கும் தேவைப்படுகிறார்கள்.
இந்தியாவில் இத்தனைத் தேவையிருக்கும் நிலையில், வெளிநாடுகளுக்குச் செல்லும்தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து வைக்கவேண்டியது அவசியமாகும். தேசிய அளவில் இது அமையும்.
இந்த டேட்டா பேஸில் இடம் பெற விரும்பும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள்,பொது தேர்வு ஒன்றை சந்திக்க வேண்டும். அவர்களைக் குறித்த பயோடேட்டாவையும் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்ச்சியாக அப்டேட் செய்துவரப்படும்.
இவர்கள் இந்தியாவை விட்டு பணி நிமித்தமாக வெளியேறும்போது தகவல்தொழில்நுட்ப சிறப்பு நடவடிக்கைக் குழு அதுகுறித்து தனியாக தகவலைத் தொகுத்துவரும். இதன் மூலம் எத்தனை பேர் இந்தியாவில் இருக்கிறார்கள், எத்தனை பேர்வெளியேறியுள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications