குப்பையை விற்கிறது சென்னை மாநகராட்சி
சென்னை:
சென்னை மாநகரில் குவியும் குப்பையை விற்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஒரு லாரி லோடு குப்பை விலை 60 ரூபாய்.
கிட்டத்தட்ட 60 லட்சம் பேர் வசிக்கும் சென்னை மாநகரில் குவியும் குப்பைகள் மாநகராட்சிக்குச் சொந்தமானவை. இந்தக் குப்பைகளின் மூலம்மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தையும், உரம் தயாரிக்கும் திட்டத்தையும் சென்னை மாநகராட்சி சோதனைரீதியாக செய்து பார்த்தது.
அவை எல்லாம் வழக்கம்போல் தோல்வியில் முடியவே, இப்போது குப்பையை கிளறும் வேலையை விட்டு விட்டு, அதை வேறு நபர்களுக்கு விற்றுவிட தீர்மானித்துள்ளது.
வீட்டுத் தோட்டங்கள், விளை நிலங்களில் குப்பைகளை உரமாக பயன்படுத்த விரும்புவோர் மாநகராட்சி குப்பை சேகரிக்கும் பிரிவை அணுகும்படி சென்னைமாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
ஒரு லாரி லோடு குப்பைக்கு 60 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்துள்ளது. பணத்தை செலுத்தி விட்டு குப்பையை அவ்வளவு எளிதாக யாரும் அள்ளிக் கொண்டுபோக முடியாது. அதை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கான நிபந்தனைகளையும் மாநகராட்சி வகுத்துள்ளது.
அதற்கு உடன்படுபவர்களுக்கு மட்டுமே குப்பை. இல்லையேல் குட்பை சொல்லி அனுப்பி விடுகிறதாம் மாநகராட்சி.
தெருக்களில், வீதிகளில் தேங்கும் குப்பைகளை அள்ளுவதற்கென்றே சிங்கப்பூர் தனியார் நிறுவனத்தை பணியமர்த்தியுள்ளது மாநகராட்சி. குப்பை சேகரிப்புமையத்தில் இருந்து குப்பைகளை மொத்தமாக கொட்டும் இடத்திற்கு கொண்டு செல்வதற்கு மட்டும் டன் ஒன்றுக்கு 150 ரூபாய் செலவாகிறதாம்.
இப்போது சேகரிப்பு மையத்திலேயே குப்பை விற்பனை செய்யப்படுவதால் இந்த செலவும் மிச்சம். 60 ரூபாய் வரவும் கிடைக்கிறது என்று கணக்குப்போட்டு தான் குப்பை விற்பனையில் இறங்கியுள்ளதாம் சென்னை மாநகராட்சி.
அதெல்லாம் ஓகே. குப்பை வாங்கலியோ குப்பை என்று கூவி விற்காமல் இருந்தால் சரி.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications