"ரேடியோ வெங்கடேசனுக்கு காவல் நீ ட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பன் விடுவிக்கக் கோரியுள்ள 5 தமிழ் தீவிரவாதிகளில் ஒருவரான ரேடியோ வெங்கடேசனுக்கு 29 ம் தேதி வரை காவல்நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழர் விடுதலைப் படையை சேர்ந்த இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரைபுதன் கிழமை சென்னையில் உள்ள தடா நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரது காவலை 29ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி சின்னப்பாண்டிஉத்தரவிட்டார்.

பின்னர் ரேடியோ வெங்கடேசனை நிருபர்கள் சந்தித்தனர். நிருபர்களிடம் அவர் கூறுகையில், வீரப்பனை ஏன் இன்னும் பிடிக்கவில்லை என்று கர்நாடகத்தைகண்டிக்கும் உச்ச நீதிமன்றம், காவிரியில் தண்ணீர் திறந்து விடாததற்காக தட்டிக் கேட்காதது ஏன்?

ராஜ்குமார் மீது தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. தமிழக நலன் கருதியே அவரை கடத்தி உள்ளோம். இது புரியாமல் வீரப்பனைமரியாதை இல்லாமல் பேசுகின்றனர். எங்கள் அமைப்பினர் எல்லோரும் இப்போது வீரப்பனுடன் தான் இருக்கின்றனர்.

ராஜ்குமார் கடத்தலால் கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்க பாதிப்பு ஏற்படும் என்று வாட்டாள் நாகராஜ் பேசுகிறார். தமிழர்களுக்கு இனிஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், கர்நாடக அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும். நான் விடுவிக்கப்பட்டால் காட்டுக்கு செல்லத்தயார். இவ்விஷயத்தில் அரசு எடுக்கும் முடிவை ஏற்பேன் என்றார் ரேடியோ வெங்கடேசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+