For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்த மூன்று நாட்கள்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

மூன்றே நாளில் நாடே ஸ்தம்பித்துப் போனது!

இன்டர்நெட் இல்லை, நெடுந்தூரத்தில் உள்ள உறவினருக்கு மெயில் அனுப்பமுடியவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. சே! எனமக்களை நொந்து கொள்ள வைத்து விட்டது வேலை நிறுத்தம்.

இந்த வேலைநிறுத்தத்தின்போதுதான் தகவல் தொடர்புத் துறையின் அபார வளர்ச்சிஅனைவருக்கும் புரிந்தது. அதன் பாதிப்பு இந்தியா முழுவதும் எதிரொலித்தது. யாரும்எதிர்பாராத இந்தப் பாதிப்பு நாடு முழுவதும் பல கோடி ரூபாய் அளவுக்ககு நஷ்டத்தைஏற்படுத்தி விட்டது. இதுவே தனியார்மயமாக்கலுக்கு மக்களிடையே முழு ஆதரவைப்பெற்றுத் தந்து விட்டது.

டெலிபோன் பில் கட்டும் இடத்திலிருந்து, வீட்டிற்கு தொலைபேசி இணைப்புக்கொடுப்பது வரை "கவனிப்பு இல்லாமல் காரியம் நடக்காது என்ற வெறுப்புடன்,இப்போது வேலை நிறுத்தமும் சேர்ந்து கொள்ள, விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்டன் மக்கள்.

நாலு பேர் கூடும் இடங்களில் எல்லாம், இந்த ஸ்டிரைக் பற்றிய விவாதம் தான்.தொழிற்சங்கங்கள் அரசை மிரட்ட இந்த வேலை நிறுத்தத்தை ஆயுதமாக எடுத்துக்கொண்டிருந்தாலும், பொதுமக்களிடையே வெறுப்பைத் தான் சம்பாதித்துக்கொண்டனர்.

தொலைத் தொடர்பு ஊழியர்கள் வேலை செய்யாவிட்டால் அரசே ஸ்தம்பித்து நின்றுவிடும் என்ற நிலையில், போட்டிக் கம்பெனிகளுக்கு அனுமதிப்பதோடு, சேவையும்நன்றாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் தனியார் கம்பெனிகளை வரவேற்கத்தயாராக உள்ளனர்.

தொலைத் தொடர்புப் பிரச்னையைப் பொருத்தவரை அரசு விரைந்து இதற்கு முடிவுகட்ட வேண்டும், இந்த முடிவு நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்பதேபொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

அடுத்து வரும் ஆண்டுகளில் பல கோடி ரூபாய்களை தனியார் நிறுவனங்கள்தொலைத் தொடர்புத் துறையில் முதலீடு செய்யவுள்ளன. இந்த முதலீடுகளால் நிச்சயம்நீண்ட கால பலன்கள் கிடைக்கும் என்பது உறுதி. மேலும், கணிசமான அளவு தொலைத்தொடர்புக் கட்டணங்கள் குறையக் கூடும்.

குறிப்பாக, இன்டர்நெட் வசதியில் டேட்டாக்களை விரைவாகப் பெறும் வகையில்கண்ணாடி இழை கேபிள்களை (ஆப்டிக்கல் பைபர்) பதிக்கப்படவுள்ளன. நாடுமுழுவதும் புதிய நெட்வொர்க் தகவல் தொடர்பினை ஏற்படுத்தக் கூடிய இந்தஆப்டிக்கல் பைபரை, நீண்ட தூரங்களுக்குப் பதிக்கும் பெரும் பொறுப்பினை இந்தியரயில்வேயும், இயற்கை எரிவாயுத் துறை (காஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாலிமிடெட்)யும், ஏற்றுள்ளன.

இதில், இந்தியன் ரயில்வே 22 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும், எரிவாயுத் துறை, 6ஆயிரம் கிலோ மீட்டருக்கும் ஆப்டிக்கல் பைபர் கேபிள்களை இணைத்து, தனியாருக்குவாடகை அடிப்படையில் சேவை செய்ய முடிவு செய்துள்ளன.

இந்தப் பணியிலிருக்கும் அரசு ஊழியர்கள், இதே போன்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டால்,மீண்டும் தகவல் தொடர்பு இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டு விடக் கூடாதுஎன்பதில் அரசு கவனமாக இப்போதிருந்தே செயல்பட வேண்டும் என்பதுதொழிலதிபர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொலைத் தொடர்புத் துறை ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தம், பனியன்ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் திருப்பூரை மிகவும் பாதித்தது. இங்கு ஈமெயில், வெளிநாட்டுத் தொலைத் தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டதால்தொழிலதிபர்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.

ஒரே நேரத்தில் 20 ஆயிரம் உள்ளூர் தொலைபேசிகள் பாதிப்படைந்தன. அப்போதுஇவர்களுக்கு கை கொடுத்தது தனியார் துறையின் மொபைல் போன் சர்வீஸ் தான்.

இந்திய வர்த்தக சபையின் கோவை கிளை, தொலைத் தொடர்பு ஸ்டிரைக்கிற்கு கடும்கண்டனம் தெரிவித்தது. தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கையைத் தெரிவிக்க,பொதுமக்களின் நலன் பாதிக்கப்படும் வகையில் செயல்படுவது சரியல்ல என அதுகூறியது.

தொலைத் தொடர்பு கற்றுத் தந்த பாடம், வருங்காலத்தில் அரசு விழிப்புணர்வுடன்செயல்பட வேண்டும் என்பதே. இனியும் இது போன்ற வேலை நிறுத்தம் ஏற்பட அரசுஅனுமதிக்குமானால், அறிவியல் தொழில்நுட்பத்தில் நாம் எவ்வளவுமுன்னேறியிருந்தாலும், அது வீணாகி விடும்.

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாய் செயல்படும் தகவல் தொடர்புத் துறை,பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதே பொதுமக்களின்எதிர்பார்ப்பு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X