For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுவை அரசு கவிழுகிறது?

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

ஒவ்வொரு கண்டமாக தப்பித்துக்கொண்டிருக்கிறது பாண்டிச்சேரி அரசு. இன்று கவிழும் நாளை கவிழும் என்று பாண்டிச்சேரி முழுக்க பேச்சாகவேஇருக்கிறது.

ஏற்கனவே இருந்த தி.மு.க அரசு மாறி. தற்பொழுது காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்துள்ளது. இந்த ஆட்சிக்கும் இப்பொழுது ஆபத்து வந்துள்ளது. இந்தமுறை அரசியல் காய்களை நகர்த்திக்கொண்டிருப்பவர் பா.ம.க தலைவர் ராமதாஸ்.

2001-ல் பா.ம.க புதுவையில் ஆட்சியைப்பிடிக்கும், 2006- ல் தமிழகத்தில் ஆட்சியைப்பிடிக்கும் என்று குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார் ராமதாஸ்.

டாக்டர் ராமதாஸ் சொல்வது போலவே 2001-க்கு முன்னரே பாண்டிச்சேரியில் பா.ம.க ஆட்சி அமைந்து விடுகின்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது.பாண்டிச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ மஞ்சினி பா.ம.கவுக்குத் தாவி விட்டார்.

மஞ்சினி எம்.எல்.ஏ விவகாரம் புதுவை அரசியலில் புயலைக் கிளப்பியது. உடனடியாக கட்சித்தாவல் தடை சட்டப்படி மஞ்சினி எம்.எல்.ஏவின் பதவிபறிக்கப்பட்டு விட்டது.

இந்திய கம்யூனிஸ்ட்கட்சியில் செல்வாக்கு மிக்க ஒரு எம்.எல்.ஏ, பா.ம.கவுக்கு வந்திருப்பதே சிறப்பான விஷயம் என்று உற்சாகமானது பா.ம.க.மறுபடியும் உற்சாகமாக களமிறங்க ஆரம்பித்தனர்.

இந்த வலையில் சிக்கியது த.மா.கா வைச் சேர்ந்த கண்ணன். த.மா.கா தலைமை மீது சற்று வருத்தத்துடன் இருப்பவர் கண்ணன். இந்த நேரத்தில்நடுநிலைமையாக உள்ள ஒரு சிலர் மூலம் கண்ணனிடம் பேசப்பட்டது.

பா.ம.கவுக்கு வந்து விடுங்கள். நீங்களே புதுவை முதல்வராகவும் இருக்கலாம் என்று சொல்ல, ஏற்கனவே த.மா.கா தலைமையின் போக்கினால்சற்று வருத்தத்தில் இருந்த கண்ணன், இது கூட சரியானது என்று நம்பத் தொடங்கிவிட்டார். அதுமட்டுமல்ல முதல்கட்ட பேச்சுகள் கூடஆரம்பமாகிவிட்டது என்றும் சொல்கிறார்கள் புதுவையில்.

புதுவை த.மா.கா பிரமுகர் ஒருவர் சொன்னார். கடந்த மாதம் 12 -ம் தேதி, சிதம்பரத்தில் த.மா.கா செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில்கண்ணன் கலந்து கொள்ளவில்லை. அடுத்தடுத்து நடந்த முக்கிய செயற்குழு கூட்டங்களையும் கண்ணன் புறக்கணித்துவிட்டார்.

கண்ணணின் கோபத்திற்கு காரணம். த.மா.காவுக்கு நிலையான முடிவுகள் இல்லை என்பதுதான். அ.தி.மு.கவுடன் கூட்டணி வேண்டாம் என்று மிகவேகமாக, ஆவேசமாக த.மா.காவை உருவாக்கினார்கள். அப்பொழுது இவரும் உற்சாகமாகவே இருந்தார். திடீரென்று தி.மு.கவுக்கு எதிராகஅதி.மு.கவுடன் கூட்டணி என்றார். அதுமட்டுமல்ல புதுவையில் தி.மு.க ஆட்சியையும் கலைத்தனர். அதில் கண்ணணுக்கு உடன் பாடில்லை. சரி என்றுபொறுமை காத்தார்.

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மூப்பனாரை மேடையில் வைத்துக் கொண்டே மூக்கறுத்தார் ஜெயலலிதா.அதன் பிறகாவது வேகம் பிறக்கும் என்று கண்ணன் நினைத்தார். மறுபடியும் ஜெயலலிதாவுக்கு பணிந்து போகிற மாதிரியான சூழ்நிலை.

போதும்! இவர்களோடு இருந்தால் நம்மையும் கோழையாக்கி விடுவார் என்று ஒதுங்க ஆரம்பித்துவிடார் கண்ணன் என்கிறார்கள் கண்ணனின்ஆதரவாளர்கள்.

கண்ணன் தற்பொழுது புதுவை மாநில பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கிறார். இவர் எந்தக் கட்சிக்குச் செல்கிறாரோ அந்தக் கட்சிக்குச்செல்ல நான்கு எம்.எல்.ஏக்களும் தயார் என்கிற சூழ்நிலையில் தான் பா.ம.க வலை விரித்தது.

பா.ம.கவிலும் தற்பொழுது ஏகப்பட்ட மாறுதல்கள். கண்ணனுடன் பேச்சுவார்த்தையும் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். பா.ம.கவில் உள்ள "அன்பானஅந்தப் பிரமுகரை சந்தித்து இரு முறை பேசினார்களாம். எல்லாம் ஒ.கே என்றாகிவிட்டது. டாக்டர் ராமதாஸையும் ஒரு முறை தைலாபுரம்தோட்டத்தில் வைத்து கண்ணன் பேசி விட்டார் என்கிறார்கள்.

கண்ணன் பா.ம.கவுக்கு வந்துவிட்டால், கண்ணணுடன் நான்கு எம்.எல்.ஏக்களும் உடன் வருவார்கள். ஏற்கனவே பா.ம.க எம்.எல்.ஏ ஒருவர்இருக்கிறார்.

அவருடன் பதவி பறிக்கப்பட்ட மஞ்சினி எம்.எல்.ஏவும் இருக்கிறார். கடைசிவரை போராடி மஞ்சினி எம்.எல்.ஏவின் பதவியை புதுப்பிக்கஏற்பாடுகளும் நடக்கிறது. அப்படி நடந்தால், பா.ம.கவிற்கு புதுவையில் மட்டும் ஏழு எம்.எல்.ஏக்கள். தற்பொழுது அரசாளும் காங்கிரஸ்கட்சிக்கும் புதுவை மாநிலத்தில் ஏழு எம்.எல்.ஏக்கள் தான். எனவே தேவைப்பட்டால் இன்னும் ஒரிருவரையும் சரிகட்டும் முயற்சிகளும் பா.ம.கதரப்பில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று புதுவை மாநிலம் முழுக்க பேச்சாகவே இருக்கிறது. அரசு நிர்வாகம் கூட, எந்த நேரத்திலும் காங்கிரஸ்ஆட்சி கவிழ்க்கப்படலாம் என்பதால் முக்கியமான ஃபைல்களில் இப்பொழுது கையெழுத்து ஏதும் போட வேண்டாம் என்று ஒதுக்கி வருகிறாராம்புதுவை காங்கிரஸ் முதல்வர் சண்முகம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X