ஹெராயின் கடத்திய ஜோடிப்புறா
மதுரை:
ஹெராயின் போதை பொருட்களை கடத்திய கைது செய்யப்பட்ட கஸ்டம்ஸ் கண்காணிப்பாளர்கள் மற்றும் கணவன் மனைவியர் பால்சாமி, க்ளாடிஸ் லில்லிஆகியோருக்கு மதுரை நீதிமன்றத்தில் தலா 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
கடந்த 1998 ம் வருடம் மே மாதம் 7 ம் தேதி சென்னை போதைத் தடுப்புப்பிரிவு உதவி இயக்குநருக்கு வந்த ரகசியத்தகவலை அடுத்து, மதுரை வசந்தநகரில் உள்ள திருச்செந்தூர் மேன்ஷன் என்ற விடுதியில் உள்ள ஒரு அறையில் 2 கிலோ ஹெராயின் போதைப் பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதுகண்டுபிடிக்கப்பட்டது.
சர்வதேச கடத்தல்காரர்கள் சிலர் ஹெராயினை வாங்குவதற்காக பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர். கஸ்டம்ஸ் கண்காணிப்பாளரின் நேரடிப் பார்வையில் இந்தவிற்பனை நடத்தப்படுகிறது என்று தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து போதைத் தடுப்புப் பிரிவு போலீஸார் மாறுவேடத்தில் சென்று மேன்ஷனை கண்காணித்தனர். இவர்களுக்கு கிடைத்திருந்த தகவலில்குறிப்பிடப்பட்டிருந்த அறையில் தங்கியிருந்த மதுரை கஸ்டம்ஸ் கண்காணிப்பாளர் பால்சாமி 2 கிலோ ஹெராயினை கடத்தல் காரர்களுக்கு விற்பனை செய்யத்தயாரானபோது போதைத் தடுப்புப்பிரிவு போலீஸார் பால்சாமியையும் சேர்த்து மற்றவர்களையும் சுற்றி வளைத்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது திருநெல்வேலி மத்திய கலால் துறை கண்காணிப்பாளரும், தனது மனைவியுமான க்ளாடிஸ் லில்லி உதவியுடன்நீண்டகாலமாக ஹெராயின் விற்பனையில் ஈடுபட்டுள்ளார் என்று பால்சாமி உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து 2ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த க்ளாடிஸ்லில்லி கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி, நாங்குநேரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மதுரையில், போதை பொருள் சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இவர்கள் மேல் சாட்டப்பட்ட குற்றங்கள் நிருபிக்கப்பட்டதால் இருவருக்கும் 15 ஆண்டுகள்சிறைத்தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
தீர்ப்புக்குப்பின் பால்சாமி மத்திய சிறைச்சாலைக்கும், க்ளாடிஸ் லில்லி வேலூர் மத்திய சிறைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications