தர்மபுரி பஸ் எரிப்பு: அதிமுக தொண்டர் விடுதலை
சென்னை:
தர்மபுரி பஸ் எரிப்புச் சம்பவத்தில் கைதான அ.தி.மு.க.பிரமுகர் ரவீந்திரனை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தமிழகத்தில் பல இடங்களில் அ.தி.மு.க வினர் கலவரத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி அருகே கல்லூரி மாணவிகள் சென்ற பஸ்சை தீ வைத்துகொளுத்தினர்.
இதில் 3 மாணவிகள் இறந்தனர். இதுதொடர்பாக அ.தி.மு.க பிரமுகர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களில் ரவீந்திரன் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார். அவர்சார்பில் வழக்கறிஞர் கோமதிநாயகம் ஆஜராகி வாதாடினார்.
நீதிபதிகள், பத்மநாபன், தங்கவேல் ஆகியோர் இவ்வழக்கை விசாரித்தனர். வழக்கை விசாரித்த அவர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்ரவீந்திரனைச் சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவை ரத்து செய்தனர்.
இந்த உத்தரவை மறுபரீசீலனை செய்யுமாறு விண்ணப்பம் அளிக்க கைதிக்கு உரிமை உள்ளது என்ற தகவல் ஆட்சியரின் உத்தரவில் இல்லை. எனவே இதுஅரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று நீதிபதிகள் கூறினர். இதையடுத்து ரவீந்திரனை உடனடியாக விடுவிக்குமாறும் நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications