கண்ணூ
கோவை:
கண்ணூ
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜகோபால் நிருபர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது;
கேரள மாநிலம் கண்ணூரில் மின் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக மின் வாரியத் தலைவர் நம்பியார் மீது அமைச்சர் சர்மா புகார் கூறியுள்ளார். இந்த திட்டத்தில்நடந்த ஊழல் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.
சமீபத்தில் பிரதமர் வாஜ்பாயின் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. கேரள கம்யூனிஸ்ட் கட்சி கூறும் புகாரைப் போல் எவ்வித மறைமுகபேரமும் அமெரிக்காவுடன் நடக்கவில்லை.
ராஜஸ்தான், கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ரயில்வே மேம்பாட்டுத் திட்டங்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் சுற்றுலா வளர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு ரயில்வே இயன்ற அளவு உதவ முன்வரும். மேலும், இந்தமாநிலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.
டில்லி, சென்னை, மும்பை போன்ற நகரங்களில் ரயில்வே ரிசர்வேஷன்களை இன்டர்நெட் லம் விரைவில் இணைக்கப்படும். இதற்கான பணிகள் நடந்துவருகிறது. கோவையிலிருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள இடப் பற்றாக்குறையைத் தவிர்க்க கூடுதல்பெட்டிகள் இணைக்கப்படும்.
திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வரை புதிய ரயில் அறிகப்படுத்தப்படுகிறது. இந்த இரவு ரயிலை கோவை வரை நீட்டிக்க முடியுமா என்பது குறித்துபரிசீலனை செய்யப்படும்.
இவ்வாறு ராஜகோபால் பேட்டியின் போது கூறினார். பேட்டியின்போது தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சியின் வர்த்தக அணித் தலைவர் சேகர்உடனிருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications