For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பந்தாடப்படும் அதிகாரிகள்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரையின் முடிசூடா மன்னன் என்று தி.மு.கவில் ஆளாளுக்குப்புகழ்ந்து கொண்டிருந்த தமிழக முதல்வரின் மகன் மு.க.அழகிரி தற்பொழுது மதுரையைகலக்கிக்கொண்டிருக்கிறார்.

கிட்டதட்ட இன்னொரு மிகப்பெரிய அரசியல் போர்க்களத்திற்கு அடித்தளம் அமைப்பதாகவே அழகிரிக்கும், தி.மு.க தலைமைக்கும் உண்டான மோதலைபார்க்கிறார்கள் தென்னக சீனியர் அரசியல் பிரமுகர்கள்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஒருவர் நம்மிடம் சற்று மனம் திறந்து பேசினார். தென் மாவட்டங்களில் அழகிரியின் செல்வாக்குஎன்பது சாதரணமானதல்ல.

தென் மாவட்ட தி.மு.க அழகிரியின் கண்ணசைவிலும், கையசைப்பிலும் நடந்தது என்பது உண்மைதான். இது தவிர, அரசு நிர்வாகம் அழகிரியின்செயல்பாட்டில் தான் இருக்கிறது. தென்மாவட்டங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகள் பலர் அழகிரிக்கு மிகவும் வேண்டியவர்கள். அல்லதுஅழகிரியால் சிபாரிசு பெற்று பதவியில் வந்திருப்பவர்கள்.

காவல்துறை மட்டுமல்ல அரசு நிர்வாகத்தின் பல மட்டங்களிலும் தனிப்பட்ட ஆதரவு என்பது அழகிரிக்கு உண்டு. பல உதவிகளை, அதிகாரிகளின் பலபிரச்சனைகளை ஒரு போனில் முடித்துக்கொடுத்து பெயர் பெற்றவர் அழகிரி. அழகிரியை எவரும் மறக்க மாட்டார்கள்.

ஒரு வகையில் இதெல்லாம் கூட, தனிப்பட்ட முறையில் தனக்கென ஒரு செல்வாக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அழகிரி நினைத்துகளமிறங்கியதனால் தான் தற்பொழுது தமிழக அரசு, அழகிரிக்கு வேண்டிய அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் என்று பலரை குறித்து வைத்து டிரான்ஸ்பர்செய்து கொண்டிருக்கிறது என்றும் சொல்கிறார் அந்த பிரமுகர்.

இந்த நிலையில், மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த பாஸ்கரன் என்பவர் திருவள்ளூர்மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பாஸ்கரன் மீது இருக்கும் ஒரே குற்றச்சாட்டு இவர் அழகிரியின் ஆதரவுஅதிகாரி என்பதுதான்.

பாஸ்கரன் மாற்றப்பட்டதில் மிகவும் கோபமடைந்து இருக்கிறார் அழகிரி. பாஸ்கரன் மாற்றப்பட்டதில், மதுரை மாவட்டத்தில் உள்ள பலஅதிகாரிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ாஸ்கரன் ஒரு சம்பவம் தான். அடுத்து பலியானவர், சாமுவேல்ராஜ். இவர் மதுரை பப்ளிக் ப்ராசிகியூட்டர். மதுரையில் நடந்த பஸ் எரிப்பு சம்பவத்தில் அழகிரிஆதரவாளர்கள் 120 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் அனைவருமே ஜாமீனில் வெளியே வந்து விட்டனர்.

இவர்கள் ஜாமீனில் வெளியே வர உதவிய சாமுவேல்ராஜை பப்ளிக் ப்ராசிகியூட்டர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாகஜெயக்குமார் என்கிற வழக்கறிஞரை தற்காலிக பப்ளிக் ப்ராசிகியூட்டராக நியமித்துள்ளது தமிழக அரசு.

மின்னல் வேகத்தில் சென்னையில் கையெழுத்தாகி ஒரே நாள் இரவில் ஜெயக்குமார் பப்ளிக்ப்ராசிகியூட்டராக நியமிக்கப்பட்டதில் ஒட்டுமொத்தநிர்வாகம் அதிர்ந்து போயிருக்கிறது.

இவர்கள் ஒரு உதாரணம் தான். அழகிரியின் ஆதரவு, ஆசி பெற்ற அதிகாரிகளின் லிஸ்ட் தயாராகிக் கொண்டு வருகிறது. வரும் நாட்களில்ஒவ்வொருவராக களையெடுக்கப்படுவார்கள் என்கிறார்கள் மதுரையிலேயே உள்ள உயர் அதிகாரிகள். கலக்கத்திலும் இருக்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X