கால்பந்து: ஆண்கள் அரையிறுதியில் அமெரிக்கா, ஸ்பெயின், காமரூன், சிலி
சிட்னி:
கால்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவு அரையிறுதியில் விளையாட அமெரிக்கா,ஸ்பெயின், காமரூன், சிலி ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளன.
சனிக்கிழமை நடந்த கால் இறுதி ஆட்டங்களில் இந்த அணிகள் சிறப்பாக விளையாடிவெற்றி பெற்று அரையிறுதியில் நுழைந்துள்ளன.
கால்பந்தில் தங்கம் வெல்லக்கூடும் என்று கருதப்பட்ட பிரேஸில் அணிக்கும், காமரூன்அணிக்கும் இடையேயான ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது.
நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா 1 கோல் போட்டுசமநிலையில் இருந்தன. இதையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.
அந் நேரத்தில் 113-வது நிமிடத்தில் கோல்டன் கோல் (முதல் கோல்) போட்டு காமரூன்எதிர்பாராத வெற்றியைப் பெற்று அரையிறுதியில் நுழைந்தது.
இரு வீரர்கள் சிகப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதால் 9 பேருடன்மட்டுமே காமரூன் அணி விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் நைஜீரியாவை 4-1 என்ற கோல்கணக்கில் சிலி தோற்கடித்தது.
3-வது கால் இறுதியில் ஸ்பெயில் 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியையும், 4-வதுகால் இறுதியில் அமெரிக்கா 5-4 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியையும்தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தன.
அரையிறுதி ஆட்டங்கள் புதன்கிழமை நடைபெறுகின்றன. அதில் கேமரூனை சிலியும்,ஸ்பெயினை அமெரிக்காவும் எதிர்த்து விளையாடுகின்றன.
பெண்கள் கால்பந்து: இறுதி ஆட்டத்தில் அமெரிக்கா, நார்வே மோதல்
கால்பந்துப் போட்டியில் பெண்களுக்கான இறுதி ஆட்டத்தில் விளையாடஅமெரிக்காவும், நார்வேயும் தகுதி பெற்றுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பிரேஸில் அணியை 1-0என்ற கோல் கணக்கில் அமெரிக்காவும், அதே கோல் வித்தியாசத்தில் ஜெர்மனியைநார்வேயும் தோற்கடித்து இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றன.
ஜெர்மனி, நார்வே இடையேயான ஆட்டத்தில் ஜெர்மனி வீராங்கனை டினாவுன்டர்லிட்ச் போட்ட "சேம் சைட்" கோல் மூலம் நார்வே வெற்றி பெற்றதுகுறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications