For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை வன்முறை... கருத்துக் கூற மூப்பனார் மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதுரையில் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைச் சம்பவங்கள் குறித்துக் கருத்துக் கூற விரும்பவில்லை என்று தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் தெரிவித்தார்.

சென்னையில் திங்கள் கிழமை மூப்பனார் அளித்த பேட்டி:

தேர்தலுக்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. மக்கள் பிரச்னைகளுக்காக தான் போராடுகிறோம். பிரச்னைகளை தீர்க்கா விட்டால்மீண்டும் போராடுவோம். தொண்டர்களை மட்டும் போராட்டத்திற்கு தூண்டி விடுகிறோம் என்பது தவறு. தலைவர்களும், தொண்டர்களும் சிறைக்குசெல்வோம். நாங்கள் அமைதியான முறையில் காமராஜர் வழியில் இந்த அறப்போராட்டத்தை நடத்துவோம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியது சரியானதே. தெரியாமல் அவர் சொல்லமாட்டார்.

தமாகா முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கிறது என்பதால் தான் திமுக எங்களை குறி வைத்து விமர்சிக்கிறது. தமாகாவுடன் ஒட்டும் இல்லைஉறவும் இல்லை என்று திமுக எந்த நோக்கத்தில் அறிவித்திருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. திமுக கூட்டணிக்கு திரும்பிப் போனால் தானேபிரச்னை.

அதிமுகவுடான எங்களது மதச்சார்பற்ற கூட்டணி தேர்தல் வரை தொருடமா என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது. நாங்கள் கூட்டணி பற்றிஇன்னும் பேசவில்லை. மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இருக்க விரும்புகிறோம். ஒற்றுமையாக இருக்கிறோம். பாஜக மதவாதகட்சியாக இருக்கும் வரை நாங்கள் அதை எதிர்ப்போம்.

சென்னையில் பெரியாரின் 122 வது பிறந்தநாள் விழா சனிக்கிழமை நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய ஜெயலலிதா, மதுரை நடந்த வன்முறைச்சம்பவத்தால் பொதுச்சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. கருணாநிதி குடும்ப அரசியல் நடத்துகிறார் என்று தாக்கிப் பேசினார். ஆனால், மு.க.அழகிரிவிவகாரம் குடும்ப விஷயம். அதை விமர்சிக்க நான் தயாராக இல்லை.

சிதம்பரம் பாஜகவில் சேருவதாக வெளியான செய்திகளை நான் மறுக்க வேண்டிய அவசியம் இல்லை. திருச்சி லோக்சபா தொகுதியில் தமாகா சார்பில்சிதம்பரம் போட்டியிடுவாரா என்பதை தேர்தல் நேரத்தில் பார்ப்போம்.

ராமதாஸ் எங்கள் கூட்டணிக்கு வருவதாக சொல்லவில்லை. திமுக கூட்டணியில் நீடிப்பதாக தான் சொல்கிறார். ஜோதிபாசு மதிக்கத்தக்க மனிதர்.மேற்கு வங்கத்தின் தந்தையாக திகழ்பவர். அவருக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுவதை கண்டிக்கிறேன் என்றார்மூப்பனார்.

முன்னதாக, திமுக வினர் யாரும் அழகிரியுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று திமுக தலைமை கூறியது. இதையடுத்து மதுரையில்அழகிரியின் ஆதரவாளர்கள் பஸ் எரிப்பு, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பலர்கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X