தப்பியது காங்கிரஸ் ஆட்சி ?
பாண்டிச்சேரி:
த.மா.காவிலிருந்து பிரிந்து சென்ற கண்ணன் அமைச்சரவையில் நீடிப்பதற்கு மூப்பனார் சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து புதுவை கூட்டணி அரசுக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடி தீர்ந்ததாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
கடந்த 20-ம் தேதி த.மா.கா எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் அக்கட்சியில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்படுவதாக கூறி சபாநாயகர்அலுவலகத்தில் கடிதம் கொடுத்தார்கள்.
புதுவை காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் அவர்கள் தனித்து இயங்க முடிவு செய்தார்கள். இதனைத்தொடர்ந்து கண்ணன் பிரிவினருக்கும், தேனீஜெயக்குமாருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் புதுவை கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
கடந்த 20 -ம் தேதி தன்னைப்பற்றிய புத்தகம் வெளியிடும் பொழுது பல தலைவர்கள் சென்னையில் இருந்த பொழுது கண்ணன் கட்சியை உடைத்ததுமூப்பனாருக்கு அவர் மேல் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கவேண்டும் என்று சண்முகத்திடம் அவர் கெடுபிடிசெய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சண்முகம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நிலைமையை எடுத்துக்கூறினார். கண்ணன் ஆதரவாளர்களின் ஆதரவுதனக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக அறிவித்திருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்றும், தேவைப்பட்டால் அவர்கள் காங்கிரஸில் சேரஇருப்பதாகவும் சண்முகம் சோனியாகாந்தியிடம் விளக்கினார்
இதனைத் தொடர்ந்து சோனியாகாந்தி மூப்பனாரிடம் போனில் பேசி அவரை சமாதானம் செய்யதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கண்ணன்அமைச்சரவையில் நீடிக்க மூப்பனார் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதுவை அரசுக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடி நீங்கியிருப்பதாக புதுவை மாநில காங்கிரஸ் தலைவர்கள் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
நிலைமை இப்படி இருக்க, கண்ணன் புதிய கட்சி ஆரம்பிக்கின்ற முயற்சியிலும் மும்முரமாக இருக்கிறார். புதுவை மக்கள் காங்கிரஸ் என்று தனது கட்சிக்குபெயர் வைக்க முடிவு செய்திருக்கும் கண்ணன் கட்சியை பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுத்துவிட்டார் என்கிறார்கள் புதுவையில்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications