மைசூர் தசரா விழா நாளை துவங்குகிறது
மைசூர்:
உலகப் புகழ்பெற்ற தசரா விழா மைசூரில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
நடிகர் ராஜ்குமார் கடந்த ஜூலை 30 ம் தேதி கடத்தப்பட்டுள்ளதால் இந்த வருடம் தசரா விழாவை மிக எளிமையாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
சாமுண்டி மலையிலுள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் பூஜை தொடங்குகிறது. சுதந்திரப் போராட்டத் தியாகி எம்.என்.ஜோயிஸ் பூஜையைத் தொடங்கி வைக்கிறார்.
முதலில் கோவில் தேவஸ்தான உறுப்பினர்கள் நடிகர் ராஜ்குமாரை வைத்துத் தான் தசரா தொடக்கவிழாவை நடத்த வேண்டும் என்று தீர்மானித்திருந்தனர்.ஆனால் ராஜ்குமார் இன்னும் விடுவிக்கப்படாததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஒன்பது நாட்கள் நடக்கும் இந்த தசரா விழா நவராத்திரி உற்சவம் என்றும் அழைக்கப்படும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அலங்கரிக்கப்பட்டயானை மீது வைக்கப்பட்டுள்ள தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். மைசூர் அரண்மனையிலிருந்து தொடங்கிபானிமண்டப மைதானத்தை அடையும்.
விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வரும் அமைச்சர் விஸ்வநாதன் கூறுகையில், மாநில அரசு தசரா விழாவிற்காக ரூ 68 லட்ச ரூபாய்ஒதுக்கியுள்ளது. மேலும் மிக எளிமையாக இந்த விழாவைக் கொண்டாடும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது. கர்நாடக மின்சார வாரியம் மைசூர் முழுவதும்சிறப்பு மின்சார வசதிக்கு ஏற்பாடு செய்துள்ளது என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications