தொழிலதிபர்களிடம் பணம் பறித்த துபாய் கும்பல் கைது
டெல்லி:
டெல்லியில் தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளை தொலைபேசி மூலம் மிரட்டிப் பணம் பறித்தது தொடர்பாக துபாயைச் சேர்ந்த நான்கு பேர் கொண்டகும்பலை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து டெல்லி கூடுதல் போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பரார் கூறியதாவது:
டெல்லியில் முக்கியப் பிரமுகர்கள், பெரும் பணக்காரர்களைக் குறிவைத்து ஒரு கும்பல் மிரட்டிப் பணம் பறித்து வருகிறது என்று போலீஸாருக்குத் தகவல்கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அந்தக் கும்பலைச் சேர்ந்த 4 பேரைக் கைது செய்துள்ளனர்.
இதுவரை 6 தொழிலதிபர்கள், சில நகை வியாபாரிகள் அக்கும்பலால் பாதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில் துபாயைச் சேர்ந்த பாஸூலா ரஹ்மான்என்பவர் தலைமையில் அக்கும்பல் செயல்பட்டு வருகிறது என்று தெரிய வந்தது.
கைது செய்யப்பட்டவர்கள் பெயர் ஜஸ்ப்ரீத் சிங் என்ற கினி, அமிர் சித்திக், கராம்பீர் தியாக், சுனில் நோடியால் என்றார்.
இதுகுறித்து துணைப் போலீஸ் கமிஷனர் பிரதீப் ஸ்ரீவத்ஸவா கூறுகையில், சாந்தினி செளக் பகுதியில் தொழிலதிபர் ஒருவரை தொலைபேசி மூலம் இக்கும்பல் ஒருகோடி ரூபாய் தரும்படியும், தராவிட்டால் அவரது குடும்பத்தையே அழித்து விடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறது.
இதேபோல் பல தொழிலதிபர்கள் மிரட்டப்பட்டுள்ளனர் என்று போலீஸாருக்குப் புகார்கள் கிடைத்தது. இதையடுத்து புலன் விசாரணையைத்தீவிரப்படுத்தினோம். விசாரணையில் முதலில் டெல்லி ஹரி நகர் பகுதியில் வசித்து வரும் ஜஸ்ப்ரீத் சிங் சிக்கினார். அவரை விசாரித்ததில் அவர்கள் துபாயைச் சேர்ந்தகும்பல் என்று தெரிய வந்தது.
இதையடுத்து அக்கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைதுசெய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளோம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications