தண்டனை தர கலைஞர் நீதிபதி அல்ல .. ப.சிதம்பரம்
மதுரை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுக்குச் சிறைத் தண்டனை தர கருணாநிதி ஒன்றும் நீதிபதி அல்ல என்று முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
த.மா.காவின் மறியல் போராட்டத்திற்காக சென்னையில் இருந்து காரைக்குடி வந்திருந்தார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். அங்குநிருபர்களை சந்தித்தார். நிருபர்களின் கேள்விக்கு உடனுக்குடன் பதிலளித்தார் சிதம்பரம்.
கேள்வி: நீங்கள் பா.ஜ.கவில் சேரப்போவதாக கூறப்படுகிறதே? உண்மையா?
பதில்: பத்திரிகை தர்மம் மெல்ல மெல்ல சாய்கிறது என்பதைத்தான் இந்த செய்திகள் காட்டுகின்றன. பாரதீய ஜனதாவில் கண்ணியமானவர்கள் பலர்இருக்கிறார்கள். கண்ணியம் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். இதற்கு மேல் இது தொடர்பாக பதில் சொல்ல எனது கண்ணியத்திற்கு அழகல்ல.
கேள்வி: சிறைநிரப்பும் போராட்டம் பற்றி?
பதில்: தலைமை எடுத்த முடிவை நிறைவேற்றுகிறோம்.
கேள்வி: பெட்ரோல்,டீஸல் விலை உயர்வு பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: இந்த ஆண்டு தொடக்கத்தில் பாரதீய ஜனதா அரசு நிதி, பொருளாதார பிரச்சனைகளை புரிந்து கொண்டு ஓரளவு திறமையாக நிர்வாகம்செய்யமுடியும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் என் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகிவிட்டது. பிரதமர் உடல் நலக்குறைவும் இந்தச் சிக்கலுக்கு ஒருகாரணம். இதைப்பார்க்கும் பொழுது கவலையும், அச்சமும் ஏற்படுகிறது.
கேள்வி: போராட்டம் நடத்தினால் சிறை என்றும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் கருணாநிதி கூறியிருக்கிறாரே?
பதில்: கலைஞர் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சர். அவருக்கு யாரும் நீதிபதி பதவியைக் கொடுக்கவில்லை.
கேள்வி: தி.மு.க ஆட்சியில் உள்ள குறைபாடுகள் என்ன?
பதில்: தி.மு.கஆட்சியின் குறைபாடுகளை த.மா.கா போராட்ட அறிக்கைகளும் சிதம்பரம் போராட்ட தீர்மானமும் படம் பிடித்துக்காட்டுகின்றன. மின்வெட்டு, ரேஷன் பிரச்சனை, டெண்டர் முறையில் ஊழல் ஆகியவை குறித்து த.மா.கா கடுமையாக விமர்சித்து அறிக்கைவெளியிட்டுள்ளது.
இந்தப்பிரச்சனைகளை முன்வைத்து எதிர்கட்சி என்ற முறையில் அரசுக்கு எங்கள் எதிர்ப்பை ஜனநாயக முறையில் தெரியப்படுத்துகிறோம் என்றார்சிதம்பரம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications