For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரங்கராஜன் மரணத்திற்கு அப்பல்லோ மருத்துவமனையைக் குறை கூறுவதா?

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் இறப்புக்கு அப்பல்லோ மருத்துவமனை பலியாக்கப்படுவதை முதல்வர் கருணாநிதி தலையிட்டு தீர்த்துவைக்க வேண்டும் என்று அகில இந்திய மருத்துவக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழகக் கிளை, பெடரேஷன் ஆஃப் டென்டல் அன்ட் மெடிக்கல் அஸோசியேஷன் ஆகிய சங்கங்கள் இணைந்து முதல்வர்கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளன. இக்கடிதம் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

மத்திய மின்துறை அமைச்சராக இருந்தவர் ரங்கராஜன் குமாரமங்கலம். வயது 48. இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் டெல்லி அப்பல்லோமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர்ஆகஸ்ட் 23 ம் தேதி இறந்தார்.

டாக்டர்களின் கவனக்குறைவால்தான் அவர் இறந்திருக்க வேண்டும் என்று ரங்கராஜனின் மனைவி கிட்டி குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் சி.பி.தாகூர், அப்பல்லோ மருத்துவமனையில் ரங்கராஜனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க விசாரணைக்குழுவைஅமைத்தார்.

அந்தக் குழு தனது விசாரணையை தாகூரிடம் கொடுத்துள்ளது. அந்த அறிக்கை விரைவில் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும். இதற்கிடையே தாகூர்,ரங்கராஜனுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது தெரிய வந்தால் அப்பல்லோ மருத்துவமனையின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

இது மக்களிடையே அப்பல்லோ மருத்துவமனை குறித்து தவறான எண்ணத்தை உருவாக்கும். மேலும் ரங்கராஜனின் குடும்பத்தினர் அப்பல்லோமருத்துவமனையில் நஷ்டஈடு கேட்டு பெற்றுக் கொள்ளலாம். இதற்கு அவர்களுக்கு முழு உரிமை உள்ளது.

இதுமட்டுமின்றி ரங்கராஜனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏனெனில் எதிர்காலத்தில் முக்கிய பிரமுகர்களுக்குஇதே போல் நடக்கக் கூடாது. இதனால் இது குறித்து முழுமையான விசாரணை நடத்த தமிழக முதல்வர் உதவிட வேண்டும் என்று அக்கடிததத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X