கட்சி அலுவலகத்தை தாக்கினர் .. இலங்கை அதிபரின் தம்பி புகார்
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் பாதுகாவலர்கள் தனது கட்சி அலுவலகத்தைத் தாக்கியதாக, சந்திரிகாவின் சகோதரரும், ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர்களில் ஒருவருமான அனுரா பண்டாரநாயகா கூறியுள்ளார்.
கொழும்புவிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அட்டாங்கலேயில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தை அதிபரின் பாதுகாப்புஅதிகாரிகள் திங்கள் கிழமையன்று தாக்கி நொறுக்கியுள்ளனர்,
இந்தத் தாக்குதலில் அக்டோபர் மாதம் 10-ம் தேதி நடக்கவுள்ள தேர்தலுக்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த பிராச்சாரத்திற்கான மூலப்பொருட்களும் சேதமடைந்துள்ளன என பண்டாரநாயகே குற்றம் சாட்டியுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் சந்திரிகாதான் குற்றவாளி என கூறவும் நான் தயங்க மாட்டேன் என பண்டாரநாயகாகோபமாக தெரிவித்தார்.
இதற்கிடையே, பண்டாரநாயகாவின் தந்தை சாலமனின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள அடான்காலேயில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாலமனின்நினைவு நாள் செவ்வாய்க்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது. சாலமன் 1959-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதிபர் குமாரதுங்கா இந்த சடங்குகளில் பங்கு கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்த சடங்குகள்பிரம்மாண்டமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
வன்முறை அதிகரிப்பு:
இந்த நிலையில், தேர்தல் நெருங்க நெருங்க இலங்கை முமுவதும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தேர்தலை கண்காணித்து வரும் ஐரோப்பியக் குழு இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications