For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக பந்த்: ஆதரவும், புறக்கணிப்பும் 50:50

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

பந்த்தை வட கர்நாடகம் முழுமையாகப் புறக்கணித்தது. தென் கர்நாடகத்தில் பந்துக்கு ஆதரவு இருந்தது.

ராஜ்குமார் ரசிகர் மன்றமும் கர்நாடக திரைப்படத்துறையும் இந்த பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

பந்த்க்கு சில மாவட்டங்களில் 80 சதவீத ஆதரவும் சில மாவட்டங்களில் 20 சதவீத ஆதரவும் மட்டுமே இருந்ததுஎன மாநில போலீஸ் டி.ஜி.பி. தினகர் கூறினார். இதுவரை பெரிய அளவில் எந்தவிதமான அசம்பாவித சமபவமும்நடக்கவில்லை. பெங்களூரில் பஸ்சின் மீது கல் வீசிய சிறுவன் கைது செய்யப்பட்டான். சேஷாத்ரிபுரத்தில் இந்தசம்பவம நடந்தது. அதே போல ராஜாஜி நகர் உள்பட 3 இடங்களில் 5 அரசு பஸ்கள் மீது கல் வீசப்பட்டது. மாநிலம்முழுவதும் சுமார் 1,500 பேர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர் என்றார்.

பெங்களூர் உள்ளிட்ட தென் மாவட்டங்ளில் பந்த் அழைப்பு ஆதரவு இருந்தது. ஆனால், வட மாவட்டங்கள் இந்தபந்தை கண்டுகொள்ளவே இல்லை. அங்கு தியேட்டர்கள் மட்டுமே மூடப்பட்டிருந்தன.

கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சந்திரசேகர் கூறுகையில், பந்த் அமைதியாக, முழுமையாகநடந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ராஜ்குமாரை விரைவில் விடுவிக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்என்றார்.

பெங்களூரில் பந்த்தின் பாதிப்பு இருந்தது. ஆட்டோக்கள் ஓடவில்லை. பஸ்கள் மிக மிகக் குறைந்த அளவிலயேஇயங்கின. கடைகள், வர்த்த நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. ஆனால், ரயில் நிலையத்துக்கு வர ஆட்டோ, பஸ் இல்லாமல் மக்கள்மிகவும் அவதிப்பட்டனர். போக்குவரத்து இல்லாமல் தேசிய நெடுஞ்சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன.

அதேபோல காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 5 விமானங்களை இந்தியன் ஏர்லைன்ஸ் ரத்து செய்தது.சென்னை, கோவா, மங்களூர், புனே, மும்பை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

வங்கிகள் திறக்கப்பட்டன, ஆனால், வாடிக்கையாளர்கள் யாரும் வராததால் வங்கிகளும் சில மணி நேரத்தில்மூடப்பட்டன.

பல சாப்ட்வேர் நிறுவனங்கள் பந்த் தினத்தை விடுமுறை தினமாக அறிவித்தன. ஆனால், சனிக்கிழமை இந்தநிறுவனங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்களும் போக்குவரத்து வசதிகளும் இல்லாததா பல சிறிய தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. கர்நாடக மின்கழகம், பெங்களூர் குடிநீர் வாரிய அலுவலகங்கள் சிறிது நேரம திறந்திருந்தன. ஆனால், போலீஸ் பாதுகாப்புஇல்லாததால் அவையும் மூடப்பட்டன.

பெங்களூர் உள்பட 8 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு அரசே விடுமுறை அறிவித்துவிட்டது.

பந்தை புறக்கணிக்க வட மாவட்டங்கள்:

வட மாவட்டங்கள் பந்த்தை முழுமையாகவே புறக்கணித்துவிட்டன. பெல்காம், ஷிமோகா, குல்பர்கா,ஹூப்ளி-தார்வாட், ரெய்ச்சூர், தாவணகெரேயில் பந்த்தை சீண்டுவார் யாரும் இல்லை. இந்த மாநிலங்களில் இயல்புவாழ்க்கை வழக்கம் போலவே இருந்தது.

ராஜ்குமாரை விடுவிக்க அரசு போதிய முயற்சிகள் எடுத்து வருகிறது. எனவே, இந்த பந்தை ஆதரிக்க மாட்டோம்என பல கன்னட அமைப்புகளே அறிவித்துவிட்டதால் இங்கு பந்த் பிசுபிசுத்துப் போனது.

குல்பர்காவில் வங்கிகள், பஸ்கள், கடைகள், ஆட்டோக்கள் ஆகியவை வழக்கம் போல் இயங்கின. பெல்காமில்பள்ளி, கல்லூரிகள் கூட இயங்கின. தார்வாடில் எல்லாக் கடைகளும் திறந்திருந்தன. போக்குவரத்தும் வழக்கம்போல இருந்தது. திரையரங்குகள் கூட முதல் இரண்டு காட்சிகளை மட்டுமே ரத்து செய்துள்ளன. மாலையில்வழக்கம் போல் படம் காட்ட திரையரங்குகள் தயாராக உள்ளன.

பந்த்துக்கு வட மாவட்டங்களில் கிடைத்த தோல்வி பந்துக்கு அழைப்பு விடுத்தவர்களை மிகவும் நொந்து போகச்செய்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X