செயற்கைக் கோளுடன் செயல்படும் சோட்டா ராஜன்
சிட்னி:
இந்தியாவைச் சேர்ந்த பிரபல தாதாவான சோட்டா ராஜன், செயற்கைக் கோள்வசதியுடன் தனது தலைமறைவு தாதா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகஆஸ்திரேலிய பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் செப்டம்பர் 15-ம் தேதி தாவூத் இப்ராகிம்கும்பலால் சுடப்பட்டு காயமுற்று சிகிச்சை பெற்று வரும் சோட்டா ராஜன் இந்தியாவைவிட்டு வெளியேறி பல காலமாகிறது. இருப்பினும் வெளி நாடுகளில் இருந்துகொண்டே அவர் இந்தியாவில், ஆள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் ஆகியவற்றில்ஈடுபட்டு வந்தார்.
துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக சிலரை பாங்காக் போலீஸார் கைதுசெய்தனர். ஆனால் அவர்களை அடையாளம் காட்ட நீதிமன்றத்தில் சோட்டா ராஜன்மறுத்து விட்டார்.
தற்போது தாய்லாந்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமுற்றுள்ள ராஜன் குறித்து தினசரிஒரு தகவல் வெளியாகிக் கொண்டுள்ளது. லேட்டஸ்ட் தகவல், செயற்கைக் கோள்வசதியுடன் சோட்டா ராஜன் இயங்கி வருவதாக கூறுகிறது.
ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் சோட்டா ராஜன் குறித்து பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சிட்னி, மெல்போர்ன், பெர்த் ஆகிய ஆஸ்திரேலிய நகரங்களில்சோட்டா ராஜனுக்கு சொத்துக்கள் உள்ளன.
ஆஸ்திரேலியாவில் முன்பு சோட்டா ராஜன் இருந்தபோது அவரைக் கொல்ல தாவூத்இப்ராகிம் கும்பல் முயன்றது. இதையடுத்தே பாங்காக்கிற்கு அவர் இடம் மாறினார்.
இதற்கிடையே சோட்டா ராஜன் கொலை முயற்சி சம்பவத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.புலனாய்வு நிறுவனத்திற்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் சில ஆஸ்திரேலியபத்திரிகைகளில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
1990-ம் ஆண்டிலிருந்தே தாவூத் இப்ராகிம் குழுவுக்கும், சோட்டா ராஜன் குழுவுக்கும்இடையே கடும் மோதல் இருந்து வருகிறது. இவர்களது சண்டையில் இதுவரை 200பேர் வரை இறந்துள்ளனர்.
முன்பு தாவூத் கும்பலில்தான் சோட்டா ராஜனும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அதற்கு முன்பாக மும்பையின் தாதாவாக இருந்த வரதராஜ முதலியாருடன் ராஜன்இருந்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications