மீண்டும் ஒரு விமானக் குழப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையிலிருந்து போர்ட்பிளேர் கிளம்பிய, அலயன்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின்விமானி, கிளம்பிய சிறிது நேரத்தில் டயர் வெடித்ததாக சந்தேகப்பட்டு அவசரமாகவிமானத்தைத் தரையிறக்கினார்.

காலை 6 மணிக்கு இந்த விமானம் வழக்கம் போல கிளம்பியது. விமானம் கிளம்பிய சிறிதுநேரத்திலேயே விமானத்தின் ஒரு டயர் வெடித்ததாக விமானிக்கு சந்தேகம் வந்தது.இதையடுத்து விமானத்தை உடனடியாக சென்னை விமான நிலையத்திற்குத் திருப்பினார்.

தரைக்கட்டுப்பாட்டு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். டயரில் ஏதோ பிரச்சினைஎனவே தரையிறக்கப் போவதாக, விமான நிலையத்திலிருந்த கட்டுப்பாட்டு அறைக்குவிமானி தகவல் கொடுத்தார். ஆனாலும், விமானத்தை உடனடியாக தரையிறக்கத்தேவையில்லை. டயரில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கட்டுப்பாட்டுஅறையிலிருந்து தகவல் கொடுக்கப்பட்டது.

இருப்பினும், விமானி தொடர்ந்து தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்பு கொண்டு,டயர் வெடித்த சப்தம் கேட்டேன். உடனடியாக தரையிறங்க அனுமதி கொடுக்கவும் என்றுவலியுறுத்தினார்.

சுமார் 90 நிமிஷங்களுக்குப் பின், விமானத்திலிருந்த எரிபொருள் அனைத்தையும் கடலில்கொட்டிய பிறகு விமானி பத்திரமாக விமானத்தை தரையிறக்கினார்.

விமானம் தரையிறங்கிய பின் முழுமையான பரிசோதனை செய்யப்பட்டது. அப்போதுடயர்கள் சரியாக இருந்தது தெரிய வந்தது. இருப்பினும் அப்போது போர்ட் பிளேரில்வானிலை சரியாக இல்லாததால், விமானம் உடனடியாகக் கிளம்பவில்லை. திங்கள்கிழமைகாலை 4.15 மணிக்கு விமானம் கிளம்பும் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம், சென்னையிலிருந்து சிங்கப்பூர் கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்குப்புற விழப் போய் அதிர்ஷ்டவசமாக தப்பியது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+