ஜெ.வுடன் சேர்ந்ததற்காக மூப்பனார் வருந்துவார் .. ஆர்.எம்.வீ.
சென்னை:
ஜெயலலிதாவுடன் சேர்ந்ததற்காக மூப்பனார் தன் வாழ்நாளில் என்றாவது ஒரு நாள்நிச்சயம் வருந்துவார் என்று எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன்சென்னையில் புதன் கிழமை தெரிவித்தார்.
சென்னையில் புதன் கிழமை அவர் அளித்த பேட்டி:
எம்ஜிஆர் கழகம் தொடங்கப்பட்டு வருகிற 17ம் தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. சென்னையில் அன்றைய தினம் நடைபெறும் கட்சியின் மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மாநில அளவில்சிறப்பு மாநாடு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் மக்களுக்கு பெரும் பாதிப்புஏற்பட்டுள்ளது. எனவே விலையுயர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்.
டீசல் விலை உயர்வால் மற்ற மாநிலங்களில் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டபோதிலும், தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என்று முதல்வர்கருணாநிதி அறிவித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா எதிர்ப்பு அரசியலை முதன் முதலில் தொடங்கி வைத்ததுஎம்ஜிஆர் கழகம் தான். அரசியலை விட்டு ஜெயலலிதாவை அப்புறப்படுத்தஅனைத்துக் கட்சிகளும் முன் வரவேண்டும். மூப்பனார் போன்றவர்கள் அத்தகையமுயற்சிக்கு துணிவோடு முன்வர வேண்டும்.
ஜெயலலிதா தலைமையில் நடந்த பெரியார் விழாவில் மூப்பனார் கலந்து கொண்டதுபெரிய தவறு. அந்த செயலை அவர் செய்திருக்கவே கூடாது. அதற்காக அவர் தன்வாழ்நாள் முழுவதும் வருந்தும் நிலைமை நிச்சயம் வரும்.
மூப்பனார் ஜெயலலிதாவை சகித்துக் கொண்டதால் தமிழகத்தில் ஜெயலலிதாஎதிர்ப்புக்கு திமுக தான் சரியான கட்சி. எனவே திமுக தலைமையிலான அணியில்நாங்கள் தொடர்ந்து இடம் பெறுவோம். இதில் மாற்றமில்லை.
சாதிப் பெயரைச் சொல்லி தங்களுக்கு சுயலாபம் தேடிக் கொள்ள சாதிக் கட்சிகளை சிலஅரசியல்வாதிகள் உருவாக்கி வருகின்றனர். இது எதிர்கால சமுதாயத்திற்கு ஏற்பட்டபேராபத்து. இதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் நாடு கெட்டுகுட்டிச் சுவராகி விடும்.
எம்ஜிஆர் பெயரில் புதிய கட்சி ஆரம்பித்திருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள்முதலில் தங்களது அரசியல் எதிரி யார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.அதன்பின்னர் எங்களுடன் வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்றார் வீரப்பன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications