ஐ.சி.சி.நாக் அவுட் கிரிக்கெட்: அரையிறுதியில் பாகிஸ்தான்
நைரோபி:
ஐ.சி.சி. நாக் அவுட் கிரிக்கெட் போட்டித் தொடரில் அரையிறுதியில் விளையாட பாகிஸ்தான் தகுதி பெற்றது.
கென்யா தலைநகர் நைரோபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையைவென்றது.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஜெயசூர்யா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெயசூர்யாவும், குணவர்த்தனேவும்களமிறங்கினர்.
தொடக்கமே அந்த அணிக்கு பெரும் அடியாக இருந்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தகுதிச் சுற்று ஆட்டத்தில் சதமடித்த குணவர்த்தனே 5ரன்னில் அவுட்டானார்.
அடுத்த வந்த அட்டபட்டுவும் ரன் எடுக்காமல் அஜ்ட்டானார். எதிர் முனையில் ஆடிக் கொண்டிருந்த ஜெயசூர்யா அதிரடி ஆட்டம் ஆடினார். அதனால்,அணிக்கு ரன்கள் வந்தது.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தபடி இருக்க எதிர் முறையில் ஜெயசூர்யா ரன்கள் குவித்தார். இருப்பினும் 39 ரன்களில் அவரும் அவுட்டனார். அவரதுஸ்கோரில் 3 சிக்சர்கள் அடங்கும்.
அடுத்து வந்தவர்களில் அர்னால்டு மட்டும் ஓரளவு நின்று ஆடி 38 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இறுதியில்45.4 ஓவரில் 194 ரன்களில் இலங்கை ஆட்டமிழந்தது.
பாகிஸ்தான் அணியில் வாஸிம் அக்ரம், அசார் மெஹ்மூத் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், சக்லைன் முஷ்டாக் இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் வெற்றி இலக்கை எஹிதாக எட்டி வெற்றி பெற்றது.
தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய இம்ரான் நசீர், சயீத் அன்வர் இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடி ரன்கள் குவித்தனர்.இருவரும் முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தனர்.
40 ரன்கள் எடுத்த நிலையில் இம்ரான் நசீர் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய யூசுப் யுகானாவும், சயீத் அன்வரும் கடைசி வரைஅவுட்டாகாமல் அணியை வெற்றி பெற வைத்தனர்.
சயீத் அன்வர் 105 ரன்கள் எடுத்தார். யுகானா 42 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அடுத்து 11-ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில்நியுசிலாந்துக்கும், ஜிம்பாப்வேக்கும் இடையே திங்கள்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை எதிர்த்து விளையாடும்.
மற்றொரு அரையிறுதியில் விளையாட இந்தியா ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. செவ்வாய்க்கிழமை நடைபெறும் கடைசி கால் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவும், இங்கிலாந்தும் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் இந்தியா 13-ம் தேதி மோதுகிறது. இறுதி ஆட்டம் 15-ம் தேதி நடைபெற உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications