இளம் கிரிக்கெட் வீரர்களை சேர்க்க தெ.ஆப்பிரிக்கா முடிவு

Subscribe to Oneindia Tamil

ஜோஹன்னஸ்பர்க்:

2003-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கிரிக்கெட் போட்டிக்குத் தயாராகும் விதத்தில், நியூசிலாந்து மற்றும் இலங்கைஅணிகளுடனான அடுத்த கிரிக்கெட் தொடர்களில் இளம் வீரர்களை அறிமுகப்படுத்ததென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

சனிக்கிழமை ஜோஹன்னஸ்பர்க் நகரில் கூடவுள்ள தென் ஆப்பிரிக்க ஐக்கிய கிரிக்கெட்வாரிய தேர்வுக் குழு உறுப்பினர்கள் புதிய அணியைத் தேர்வு செய்யவுள்ளனர்.

அக்டோபர் 20-ம் தேதி நியூசிலாந்து அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்துவங்கவுள்ளது. மொத்தம் ஆறு போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளன.இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் தென் ஆப்பிரிக்க அணியில் இளம் வீரர்கள்நிறைந்திருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீப காலமாக தென் ஆப்பிரிக்க அணி மீது ஊழல் புகார்கள் உள்பட பல புகார்கள்சுமத்தப்பட்டன. அணியின் கேப்டனாக இருந்த குரோனியே ஊழல் புகார் காரணமாகபதவியிழந்தார்.

தற்போது சனிக்கிழமை கூடவுள்ள கூட்டத்தில் புதிய வீரர்கள் தேர்வு இருக்குமாஎன்ப்து உறுதியாகத் தெரியவில்லை. தேசிய தேர்வாளர் கமிட்டி தலைவர் ருஷ்டிமேஜியத் கூறுகையில், இப்போதைய கூட்டம் வரவிருக்கிற நியூசிலாந்துதொடருக்கான அணியைத் தேர்வு செய்யவே கூட்டப்பட்டுள்ளது. புதிய வீரர்கள்தேர்வு இப்போதே இருக்குமா என்று கூற முடியாது என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+