லால் பகதூர் சாஸ்திரி மரணம்: மீண்டும் விசாரிக்கக் கோருகிறார் மகன்
லக்னோ:
34 வருடங்களுக்கு முன், அப்போதைய சோவியத் யூனியனின் தாஷ்கண்ட் நகரில் மரணமடைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என அவரது மகன் சுனில் சாஸ்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில பாரதிய ஜனதாக் கட்சிப் பொதுச் செயலாளராக இருக்கும் சுனில் சாஸ்திரி நிருபர்களிடம் கூறுகையில்,
என் தந்தை, இந்தியா, பாகிஸ்தான் இடையேயுள்ள பிரச்சனை குறித்து, தாஷ்கண்ட் நகரில் பாகிஸ்தான் சர்வாதிகாரி அயூப் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.ஆனால், பேச்சுவார்த்தை முடிந்து உயிருடன் திரும்பவில்லை. அவரது மரணமடைந்தார் என்ற செய்திதான் கிடைத்தது. அவர் எப்படி இறந்தார் என்பதுமர்மமாகவே உள்ளது.
எனது தந்தையின் மரணம் குறித்து மத்திய அரசு, மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மரணத்தின் பின்னணி குறித்து ஆராய வேண்டும்.
இரண்டாவது உலகப்போரின் போது, சுபாஷ் சந்திரபோஸ் மரணமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்ததகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அவர் இறந்தது குறித்து சமீபத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.இதேபோல் எனது தந்தையின் மரணம் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றார் சுனில் சாஸ்திரி.
காங்கிரஸ் கட்சியிலிருந்த சுனில் சாஸ்திரி, சில வருடங்களுக்கு முன் பாரதிய ஜனதாக் கட்சியில் சேர்ந்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications