For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அனல் மின் நிலையங்களுக்கு தேசிய விருது

By Staff
Google Oneindia Tamil News

கேள்வி - பதில்

கே: கலைஞர் அரசை கலைக்கும்படி ஜெயலலிதா கூறியதற்கும், ஜோதிபாசுவின்அரசை கலைக்கும்படி மம்தா கூறுவதற்கும் வேறுபாடு என்ன?

ப: பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும் ஒரு வித்தியாசம் தெரிகிறது.ஜெயலலிதா தனது கோபத்திற்கு பலியானார் ; மம்தா தனது கோபத்தைபயன்படுத்துகிறார்.

கே: சுதந்திரம் அடைந்து இவ்வளவு நாள் ஆகியும், காந்தி கண்ட பாரதத்தை உருவாக்க முடியாமைக்கு காரணம்...?

ப: உங்களுக்கு வேறு வேலை இல்லையா? இந்த மாதிரி எதையாவது கிளப்பி விட்டால், முதல்வர் தமிழகத்தில் நடப்பது காந்திஜியின் ஆட்சிதான் என்றுசொல்ல ஆரம்பித்து விடுவார். பேசாமலிருங்கள். காந்தி பெயர் பிழைத்துப் போகட்டும்.

கே: மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பு பற்றி ...?

ப: ஒரு நாள் செய்திக்குப் பயன்பட்டதைத் தவிர, வேறு ஒன்றும் விசேஷமில்லை.

கே: பல நாடகங்கள் நடத்திய தங்களுக்கு, அண்மையில் நாகப்பா - நக்கீரன் நடத்தியிருக்கும் ஒரு நாடகம் பற்றி தாங்கள் கூற விரும்புவது ...?

ப: கதையே புரியாவிட்டாலும். காட்சிகளே தெரியாவிட்டாலும், வசனமே கேட்காவிட்டாலும், மக்கள் கவனத்தை கவருகிற நாடகம் - நீங்கள்குறிப்பிடுகிற நாடகம். இதை ஓர் அற்புதம் என்று கூறுவதைத்தவிர, வேறு என்ன இருக்கிறது சொல்ல?

கே: பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு வாபஸ், இப்போது இல்லை - என்று அமைச்சர் ராம் நாயக் அறிவித்துள்ளதைப் பற்றி ...?

ப: அடுத்த நாளே தனது நிலையை அவர் மாற்றிக் கொண்டு விட்டாரே! ஆக, அவருடைய இலாகா சம்பந்தமான முடிவு, அவர் கையில் இல்லை என்பதுதெரிகிறது.

கே: ஐ டோண்ட் நோ எனிதிங் அபவுட் கோபால் ஆர் வீரப்பன் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளாரே...?

ப: தமிழக மக்கள் சார்பில் பேசியிருக்கிறார்.

கே: வீரப்பனிடமிருந்து தகவல் வந்ததும் கோபால் காட்டுக்குச் செல்வார் என்று கருணாநிதி கூறியுள்ளாரே?

ப: அப்படிச் சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. வீரப்பனிடமிருந்து கோபாலுக்கு சிக்னல் வரும் ; அதன் பிறகு அவர் செல்வார் என்று முதல்வர்பேசியிருக்கிறார்.

சினிமாவில் எல்லாம் பாஸ்,சிக்னலுக்காக காத்திருக்கிறோம் என்று வருமே, அது போல் இருக்கிறது! சரியான கூத்து.

கே: உண்மையான தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் நாங்கள்தான் என்கிறாரே புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி. சண்முகம். இது பற்றி ...?

ப: உண்மையான பா.ம.க.வாக மாறாமல் இருந்தால் சரி.

கே: தங்களின் நாடகங்களுக்கு தமிழக மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பார்க்கும் போது, தங்களின் கருத்துக்களை தமிழக மக்கள் ஆதரிப்பதுபோல் எனக்குத் தெரிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ப: இல்லை. நீங்கள் சொல்கிற மாதிரி நான் நினைக்கவில்லை. இவனைப் புரிந்து கொள்ள முடிகிறதா பார்ப்போம் - என்ற முயற்சியை மக்கள்இன்னமும் கை விடவில்லை என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

கே: தந்தை பெரியாரை, ஜெயலலிதா வடிவில் காணும் வீரமணி ; இறைவனை முதல்வர் கருணாநிதி வடிவில் காணும் தமிழ்க்குடிமகன் - ஒப்பிடுக!

ப: இந்த இரண்டுமே - மக்கள் கருத்தை, தேர்தல் முடிவில் காண்பதாக நினைக்கிற நம் கருத்தைப் போல்தான், காலத்தை ஓட்டியாக வேணடும் ;அதற்கு வேறு வழியில்லை - என்பதால் எழுகிற கருத்துக்கள் இவை.

கே: சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 70-வது ரேங்க் குறித்து ...?

ப: சும்மா, மட்டம் தட்டாதீர்கள்.அடுத்த முறை பாருங்கள் 69-வது இடத்தைப் பிடித்துக் காட்டுகிறோமா இல்லையா பாருங்கள்.

கே: பிராமணீயம் என்று ஒரு சித்தாதந்தம் இல்லை எனக் கூறும் தாங்கள், வெறுக்கத்தக்கதா பிராமணீயம் என்று தொடர் கட்டுரைக்குப் பெயர்வைக்கக் காரணம் ...?

ப: பிராமணீயம் வெறுக்கத்தக்கது என்று கூறுபவர்கள், எதை பிராமணீயம் என்று கூறுகிறார்களோ - அதைப் பற்றிய கட்டுரைத் தொடருக்கு -இந்தத் தலைப்பு பொருத்தமே!

கே: பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் பெற்றுள்ள அமோக வெற்றி பற்றியும், பா.ஜ.க. பெற்றுள்ளதோல்வி பற்றியும் தங்கள் கருத்து?

ப: குஜராத் மக்கள், பா.ஜ.க.வுக்கு விடுத்திருக்கிற கடுமையான எச்சரிக்கை இது. காங்கிரஸ் கட்சியின் உட் பூசல்களையும் மீறி, மக்கள் அக்கட்சியைஆதரித்திருக்கிறார்கள்.

பா.ஜ.க. ஆட்சியின் மீது மக்களுக்கு கோபம் இல்லாவிட்டால் இப்படி நடந்திருக்காது. இந்த உண்மையை மறைத்து, இது உள்ளாட்சி தேர்தல்தானே ;இதில் மாநில அரசின் செயல்பாடு பற்றி மக்கள் கருதுவதில்லை என்று சாக்கு சொல்லி தோல்வியின் கடுமையை மறைக்க பா.ஜ.க. முயன்றால் -அது அவர்களுக்குத்தான் கெடுதலாக முடியும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X