For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்டர்நெட் மூலம் கம்பெனிகளை பதிவு செய்யலாம்!

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

இன்டர்நெட் மூலம் கம்பெனிகளை பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகமத்திய சட்டம் மற்றும் கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் அருண் ஜெட்லிகூறியுள்ளார்.

கோவையில் கம்பெனிகளின் பதிவு அலுவலகத்தை பங்குச் சந்தைக் கட்டடவளாகத்தில் திறந்து வைத்து மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பேசியதாவது:

தொழில் போட்டி தொடர்பான சட்ட விதிறைகளில் மேற்கொள்ளப்படும் திருத்தம்இன்டர்நெட் மூலம் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்களின் யோசனைகளுக்குவைக்கப்படும்.

தொழில் போட்டி தொடர்பான சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டு இறுதி நிலையில்உள்ளது. இந்த சட்ட விதிமுறைகள் முதலில் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்களின்பார்வைக்கு வைக்கப்படும்.

இன்டர்நெட் தளத்தில் வைக்கப்படும் இந்த விதிமுறைகளில் செய்ய வேண்டியமாற்றங்கள், விதிமுறை தொடர்பான சந்தேகங்கள், கருத்துக்களை இந்த வெப்சைட்மூலம் தெரிவிக்கலாம். இந்த கருத்துக்களையும் அமைச்சகம் பரிசீலனை செய்யும்.இதன் பின்னரே பார்லிமென்டில் ஒப்புதலுக்கு வைக்கப்படும். ஒப்புதலுக்குவைக்கப்படும்போது பொதுமக்களின் கருத்துக்களும் தெரிவிக்கப்படும்.

இந்தியாவில் 7 கம்பெனிகளின் பதிவு அலுவலகங்கள் உள்ளன. அனைத்துகம்பெனிகளின் பதிவு அலுவலகங்களையும் "காகிதம் இல்லாத (பேப்பர்லஸ்)அலுவலகங்களாக மாற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்குமுன்னோடியாக கோவை அலுவலகம் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் இருந்து கொண்டு, கம்பெனிகளை பதிவு செய்து கொள்ளும்வழிமுறைகள் விரைவில் ஏற்படும். இன்டர்நெட் மூலம் கம்பெனிகளைப் பதிவு செய்யஇயலும்.

வறுமையை ஒழிக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.சர்வதேச நாடுகளில் மிகவேகமான பொருளாதார வளர்ச்சி பெறும் நாடாக இந்தியாஇருந்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி தற்போது 6 சதவீதமாக இருந்துவருகிறது. இதனை 8 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

நாட்டில் உள்ள அரசு நிறுவனங்கள் ஆண்டுக்கு ஆண்டு நஷ்டத்தில் இயங்குவதையாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த நிறுவனங்களை நடத்தபொதுமக்களின் வரிப் பணம் பயன்படுத்தப்படுகிறது. நஷ்டத்தை சரிக்கட்ட மேலும்மேலும் பொதுமக்களின் மீது வரிச் சுமையை ஏற்றுவது மிகவும் தவறானமுன்னுதாரணம்.

நாட்டின் ஒட்டுமொத்த வருவாயில் பாதியளவு கடன், வட்டிச் சுமைக்கு சென்றுவிடுகிறது. மீதமுள்ள 50 சதவீதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளமாகக் கொடுக்கப்பட்டுவிடும். மீதமுள்ள சிறிய அளவு நிதியை வைத்து பஞ்சாயத்துகளின் வளர்ச்சிக்குஎவ்விதத்திலும் உதவ முடியாது.

மிகப் பெரும் மக்கள் தொகையைக் கொண்டுள்ள அரசு, எவ்வளவு வரிகளைவிதித்தாலும், நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியாது. மக்களின் அதிகரித்து வரும்தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது.

போதுமான தகவல் தொடர்பு, ரோடு வசதி, போக்குவரத்து, மின்சாரம் என அனைத்துவசதிகளையும் மேம்படுத்துவது அரசினால் இனி வரும் காலங்களில் இயலாத காரியம்.

தொழிற்சாலைகளை உருவாக்கி உற்பத்தியைப் பெருக்கி, வியாபாரத்தைப்பெருக்குவது அரசின் வேலை அல்ல. அரசு வியாபார நிறுவனமாக இருக்கக் கூடாது.தொழிற்சாலைகளுக்கும், தொழில் வளர்ச்சிக்கும் உறுதுணையாகச்செயல்படுபவையாகவும், அதற்கு ஏற்ப விதிமுறைகளைத் தளர்த்தி, உதவ வேண்டியதுஅரசின் கடமை.

தொழிற்சாலைகள் வளர தேவையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம்வேலை வாய்ப்பு பெருகும். இதன் மூலம் பொதுமக்களின் வாழ்க்கைத் தரம்மேம்படும். அப்போது வறுமை ஒழியும் என்றார்.

பின்னர் பேட்டியின்போது, ராவ், பூட்டாசிங் ஆகியோருக்கு அளித்த தண்டனைகுறித்து நிருபர்கள் கேட்டபோது, "சட்டப்படி அவர்களுக்குத் தண்டனைகிடைத்துள்ளது. இது பற்றி விமர்சிக்கத் தேவையில்லை. சட்டத்தின் முன்பு யாராகஇருந்தாலும் தண்டனை பெற்றுத் தான் ஆக வேண்டும். நீதி நிலைப்பதற்கான நல்லஅறிகுறிதான் இது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X