அமெரிக்க போர்க்கப்பல் மீது திட்டமிட்டு தாக்குதல்?
வாஷிங்டன்:
அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யு.எஸ்.எஸ். கோல் என்ற போர்க் கப்பல் மீதானதாக்குதல் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்றுசந்தேகிக்கப்படுகிறது.
ஏமன் நாட்டுடனான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் அந்நாட்டின் ஏடன் துறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்கள் கடந்த 15 மாதங்களாகஎரிபொருள் நிரப்பி வருகின்றன.
இந் நிலையில், எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த யு.எஸ்.எஸ். கோல் என்ற போர்க்கப்பல் மீது தீவிரவாதிகள் வியாழக்கிழமை வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில்2 பெண்கள் உள்பட 17 பேர் இறந்துவிட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
இந்த மனிதாபிமானமற்ற, ஈவிரக்கமற்ற செயலைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும்அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் பில்கிளின்டனும், அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் வில்லியம் கோஹெனும்தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில், அமெரிக்க போர்க் கப்பல் மீதான தாக்குதல் திட்டமிட்டுநடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேற்காசியப் பிரச்சினையில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை அமெரிக்காஎடுக்கலாம் என்ற எண்ணத்தில் தீவிரவாதிகள் இத் தாக்குதலை நடத்தியிருக்கலாம்என்று கருதப்படுகிறது.
இருப்பினும், இஸ்லாமிய எச்சரிக்கைக் குழுவினர் இத்தாக்குதலுக்குபொறுப்பேற்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், அது எந்த அளவுக்கு உண்மை என்பதைபென்டகன் தெரிவிக்கவில்லை.
இத் தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் பென்டகன்தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சம்பவம் நடத்த இடத்துக்கு மேலும் இரு போர்க்கப்பல்கள்விரைந்துள்ளன. அது தவிர, பயங்கரவாத தடுப்புக் குழுவினர், எஃப்.பி.ஐ. குழுவினர்ஆகியோரும் அங்கு விரைந்துள்ளனர்.
இதற்கிடையே, அமெரிக்க போர்க் கப்பல் மீது திட்டமிட்டே தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது என்று அமெரிக்காவின் கடற்படை நடவடிக்கைக் குழுத்தலைவர்அட்மிரல் வெர்னான் கிளார்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க போர்க் கப்பல்களின் நடமாட்டத்தையும், அவை எப்போது எங்கேசெல்கின்றன எங்கு நிற்கின்றன என்பதைப் பற்றி முன்கூட்டியே பல நாட்களாகதிட்டமிட்டுத்தான் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. முன் கூட்டியே திட்டமிடாமல்இத்தகைய தாக்குதலை நடத்தியிருக்க முடியாது என்றார் அவர்.
ஏடன் துறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்கள் எரிபொருள் நிரப்பிக்கொள்வதற்கு குறைந்தது 4 முதல் 6 மணி நேரம் ஆகும். எரிபொருள் நிரப்பிக்கொண்டிருக்கும் கப்பலுக்குப் பாதுகாப்பாக துறைமுகத்தைச் சுற்றி சிறிய நவீனவிமானம் ஒன்று எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கும்.
அப்படி இருக்கும்போது இத் தாக்குதல் நடத்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்கூட்டியேதிட்டமிடாமல் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கமுடியாது. ஏடன் துறைமுகத்துக்குயு.எஸ்.எஸ். கோல் கப்பல் வர இருப்பது பற்றி ஏடன் துறைமுக அதிகாரிகளுக்கு 12நாட்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் துறைமுக உதவியாளர்களுடன் தீவிரவாதிகள் தொடர்பு கொண்டுதிட்டமிட்டு இத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!