சவால்களை சமாளிப்பாரா சந்திரிகா?
கொழும்பு:
ஆதரவு அளித்துள்ள கட்சியின் நிபந்தனை, எதிர்க்கட்சியின் எதிர்ப்பு போன்றபலவிதமான சவால்களுக்கு இடையில் ஆட்சி நடத்தும் நிலைக்கு சந்திரிகாகுமாரதுங்கா தள்ளப்பட்டுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. ஆனால், 225 இடங்கள் கொண்டநாடாளுமன்றத்தில் சந்திரிகாவின் மக்கள் கூட்டணி 107 இடங்களை வென்றுள்ளது.
முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 89 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.10 இடங்களை வென்றுள்ள இலங்கையின் முக்கிய முஸ்லிம் கட்சியான இலங்கைமுஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன்சந்திரிகா குமாரதுங்கா ஆட்சி அமைத்துள்ளார்.
இந் நிலையில், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சில நிபந்தனைகளின் பேரில்தான்சந்திரிகா அரசுக்கு ஆதரவு அளித்துள்ளது. புதிய அரசியல் சட்டத் திருத்தத்தைஅமல்படுத்தவேண்டும். தேர்தல், நீதித்துறை போன்றவற்றைக் கண்காணிக்க தனிகமிஷன்கள் அமைக்கவேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை அக் கட்சித்தலைவர் ராஃப் ஹக்கீம் விதித்துள்ளார்.
100 நாட்களுக்குள் இந்த நிபந்தனைகளை சந்திரிகா நிறைவேற்றவேண்டும்.இல்லையென்றால் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வோம் என்று அவர்எச்சரித்துள்ளார்.
ஆதரவுக் கட்சி இவ்விதம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முக்கியஎதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி, மடாலே, நுவாரா ஆகிய மூன்றுமாவட்டங்களில் மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும் என்று அக் கட்சி கோரியுள்ளது.இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளது.
அமைச்சர் ஒருவருடைய மகன் மற்றும் அவரது ஆதரவாளர்களால் நிறைய கள்ளஓட்டுக்கள் போடப்பட்டன, வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டன என்று அக்கட்சிகுற்றம் சாட்டியுள்ளது.
அப்படி அந்த மாநிலங்களில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டால் அது சந்திரிகாவின்மக்கள் கூட்டணிக்குப் பெரும் பாதிப்பாக அமையும் என்று அரசியல் கருத்துக்கணிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்காததற்கு ஆளும் கட்சியினரின் வன்முறைதான்காரணம். இல்லையென்றால் நிச்சயம் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றிருக்கும்என்று அக் கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications