For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவிலிருந்து 4500 டன் ஜவுளி ஏற்றுமதியாகும் வாய்ப்பு!

By Staff
Google Oneindia Tamil News

திருப்பூர்:

பிரேசிலில் நடக்கும் ஐரோப்பிய யூனியன் ஜவுளி மேலாண்மைக் கூட்டத்தில் 4ஆயிரத்து 500 டன் ஜவுளிப் பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதிசெய்துகொள்ள அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என ஆயத்த ஆடைகள்ஏற்றுமதிக் கழகத்தின் சேர்மன் ராஜூ கோயங்கோ தெரிவித்தார்.

திருப்பூரில் 10-வது கோடை கால ஆயத்த ஆடைக் கண்காட்சி துவங்கியது. இந்தக்கண்காட்சியில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதிக் கழகத்தின் சேர்மன் ராஜூகோயங்கோ, இணைச் செயலர் அடுல் சதூர்வேதி ஆகியோர் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:

ஆயத்த ஆடைகள் மட்டுமின்றி இழைகளின் ஏற்றுமதிக்கும் சர்வதேச அளவில்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நூலிழை ஏற்றுமதிக்கு அரசு பல சலுகைகளைஅறிவித்துள்ளது. 161 வகையான ஜவுளிப் பொருள் ஏற்றுமதிக்கு வரிச் சலுகையும்அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை தொழிலதிபர்கள்பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த இரண்டு நாட்களாக ஐரோப்பிய நாடுகளின் ஜவுளி ஏற்றுமதி மேலாண்மைகுறித்த மாநாடு பிரேசிலில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில், 4 ஆயிரத்து 500 டன்ஜவுளிப் பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து கொள்ள வாய்ப்புஏற்படும் என எதிர்பார்க்கிறோம்.

இந்த ஜவுளிப் பொருட்கள் அனைத்தும் கோட்டாமுறையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு,இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் ஆயிரத்து 700 டன் திருப்பூருக்கு ஏற்றுமதி வாய்ப்புகிடைக்கும். இதன் மதிப்பு ரூ. 150 கோடியாகும். இது இந்த ஆண்டு இறுதிக்குள்ஏற்றுமதியாகும் என்றனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல் கூறுகையில்,

திருப்பூர் நகரம், ஏற்றுமதியில் இருந்தாலும், தரமான பொருட்களை ஏற்றுமதி செய்யதயாராகி வருகிறது. இதற்கென நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஐ.எஸ்.ஓ 9000 தரச்சான்றிதழ்களை இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் பெற்றால், ஏற்றுமதி எளிதாகும்.

திருப்பூரில் தற்போது "பிராண்ட் ஒன்றை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இது வெற்றி பெற்றால், ஏற்றுமதி இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சர்வதேசச் சந்தையில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி தற்போது வெறும் 2 சதவீதமாகமட்டுமே உள்ளது. இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மன், அமெரிக்க நாடுகளுக்கு ஆயத்தஆடைகள் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X