For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தடா கைதிகளை விடுவித்தால் ராஜ்குமாரை வீரப்பன் கட்டாயம் விடுவிப்பானா?

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தடா கைதிகளை விடுவித்தால் ராஜ்குமாரை வீரப்பன் விட்டுவிடுவான் என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது எனகர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மைசூரில் சிறையில் உள்ள தமிழ் தடா கைதிகள் விடுதலை குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்பட்டது.புதன்கிழமை விசாரணை தொடர்ந்தது.

கர்நாடகத்தில் அமைதியை நிலை நாட்டுவதற்காகக் தான் இந்த தடா கைதிகளை விடுவிக்க முடிவு செய்ததாககர்நாடக அரசின் வழக்கறிஞர் சால்வே நீதிமன்றத்தில் கூறினார். இது தொடர்பாக ஒரு விளக்க மனுவையும் தாக்கல்செய்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் பரூச்சா, மெகோபாத்ரா, சபர்வால் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் கர்நாடகத்துக்கு பலகேள்விகளை எழுப்பினர். எதற்காக தடா கைதிகள் மீதான வழக்கை வாபஸ் பெறுகிறீர்கள் என்ற முழு விவரத்தைதடா நீதிமன்றத்தில் கர்நாடக அரசு முழுமையாக விளக்கவில்லை என நீதிபதிகள் கூறினர்.

கர்நாடக வழக்கறிஞர் சால்வே கூறுகையில், 72 வயதான ராஜ்குமாரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும் தான்தடா கைதிகளை விடுவிக்க அரசு முடிவு செய்தது. ராஜ்குமாரை மீட்காமல் இருந்தால் ஏற்படும் பிரச்சனைகள்இவர்களை விடுவிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளைவிடக் குறைவு தான் என்றார்.

அப்போது இடை மறித்துப் பேசிய நீதிபதி பரூச்சா, இந்த தடா கைதிகளை விடுவித்தால், வீரப்பன் ராஜ்குமாரைவிடுவித்துவிடுவான் என்பது என்ன நிச்சயம். அவன் விடுதலை செய்வான் என்பதற்கு ஆதாரம் ஏதாவதுஇருக்கிறதா என்றார்.

அதற்கு பதிலளித்த சால்வே, மாநில அரசிடம் பேசிவிட்டு இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக பதில் தருகிறேன்என்றார்.

முன்னதாக விவாதத்தைத் துவக்கிய சால்வே, வீரப்பனின் பல கோரிக்கைகளும் அரசியல்ரீதியிலானவை. கர்நாடகமக்களை எரிச்சல் படுத்தவும் கர்நாடக அரசை தொல்லைக்குள்ளாவாக்குவதும் தான் வீரப்பனின் நோக்கம்.வீரப்பனை பிடிப்பது என்பது மிக சிரமமான விஷயம். 18,000 சதுர கி.மீ. பரப்புள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில்அவன் இயங்கி வருகிறான். காட்டுப் பகுதியில் உள்ள மக்களும் வீரப்பனை ஆதரித்து வருகின்றனர் என்றார்.

நீதிபதி பரூச்சா இடை மறித்துக் கூறுகையில், ராஜ்குமார் கடத்தப்பட்டது முதல் கர்நாடகமும், தமிழக அரசும்அவரை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தடா கைதிகளை விடுவிப்பதில் மட்டுமே அக்கரையாகஉள்ளன என்றார்.

இந்த விவாதத்துக்குப் பின் விசாரணை மீண்டும் நாளைக்கு (வியாழக்கிழமை) ஒத்தி வைக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X