சட்டசபைத் தேர்தல்: 50 இடங்கள் வேண்டும் என்கிறது பா.ஜ.க.
சென்னை:
ஜாதிக் கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கட்சி முக்கியத்துவம் கொடுக்காது. வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் ஐம்பது இடங்களில்பா.ஜ.க போட்டியிடும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் கிருபாநிதி நிருபர்களிடம் கூறினார்.
நாகர்கோவிலில் நிருபர்களிடம் பேசிய டாக்டர் கிருபாநிதி, பா.ஜ.கவின் வளர்ச்சி மகிழ்ச்சி தரும் வகையில் உள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லா தொகுதிகளிலும் போட்டியிட பா.ஜ.க. தயாராக உள்ளது.
தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பார்க்கும்போது தேர்தலில் அதிக எம்.எல்.ஏக்களை பா.ஜ.க பெறும்.தமிழகத்தில் பா.ஜ.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று மாதங்களில் மூன்றரை மடங்கு உயர்ந்துள்ளது.
மூன்று லட்சம் உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 லட்சமாக உயர்ந்துள்ளது. பிற கட்சியை சேர்ந்தவர்களும் பா.ஜ.கவில் இணைவதில்ஆர்வமாக உள்ளனர்.
ராஜ்குமாரை மீட்கும் விஷயத்தில் தி.மு.க அரசின் செயல்பாடு சரியான பாதையில்தான் செல்கிறது. அவரை உயிருடன் மீட்கவேண்டும். தீவிரவாதத்தை பா.ஜ.க ஒரு போதும் ஆதரிக்காது. முதல் கட்டம் ராஜ்குமார் மீட்பு. அடுத்த கட்டம் தான் வேறுநடவடிக்கைகள்.
ராமதாஸ் - வாழப்பாடி மோதலால் கூட்டணியில் எவ்வித பிரச்சனையும் இல்லை. மம்தா பானர்ஜி அரசியல்வாதி. அதனால்அவருக்கு பிரச்சனைகளின் உண்மை நிலை தெரியும். ஆனாலும், தனது மாநில மக்களை திருப்திபடுத்துவதற்காககோரிக்கைகளை வைக்கிறார்.
இதனால் கூட்டணிக்கு பிரச்சனை இல்லை.
ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கேபினட் அந்தஸ்து கேட்டு வற்புறுத்தப்படும். வரும் தேர்தலில் பா.ஜ.க. ஐம்பது இடங்களைக் கோரும்.கூட்டணியில் பேசி முடிவு செய்து போட்டியிடுவோம்.
இவ்வாறு கிருபாநிதி கூறினார். பேட்டியின் பொழுது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications