இனி, இன்டர்நெட் மூலம் குறைகளைத் தீர்க்கும் மின் வாரியம்
சென்னை:
இணையத்தின் (இன்டர்நெட்) மூலம் மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் புதிய திட்டம்ஒன்றை தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்த உள்ளது.
இது குறித்து மின்வாரியம் சனிக் கிழமை வெளியிட்ட அறிக்கை:
மக்களுக்கு எளிய முறையிலும் விரைவாகவும் குறைகளைத் தீர்க்க வேண்டும் என்றதமிழ் நாடு அரசின் கொள்கைக்கு ஏற்ப தமிழ்நாடு மின்சார வாரியம் இணையத்தின்மூலம் மின் நுகர்வோர் புகார்களைப் பெற்று அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்துஇணையத்தின் மூலமாகவே பதில் அளிக்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் மின் நுகர்வோர்கள் இணையத்தின் மூலம் எந்நேரத்திலும்எவ்விடத்திலிருந்தும் தங்களுடைய புகார்களை மின்சார வாரியத்திற்கு அனுப்பலாம்.
மின் நுகர்வோர்கள் இணையத்தின் மூலம் எந்நேரத்திலும், எவ்விடத்திலிருந்தும்தங்களுடைய புகார்களைப் பதிவு செய்ய தகுந்தாற்போல் இந்த மென்பொருள்உருவாக்கப்பட்டுள்ளது.
மின் நுகர்வோர்கள் இணையத்தில் உள்ள மின்வாரியத்திற்கென்று உரிய இணையத்தளமான www.tneb.org மூலமாக தங்களுடைய புகார்களை பதிவு செய்யலாம்.
மின் நுகர்வோர்கள் கணினி மூலம் மேற்கூறிய இணைய தளத்திற்கு செல்லும்போதுபுகார்களைப் பதிவு செய்வதற்கான படிவம் தோன்றும். படிவத்தை நிறைவு செய்துஅனுப்புவதற்கான ஆணையை கணினி மூலம் இட்ட பிறகு அப்புகார் தலைமை மக்கள்தொடர்பு அலுவலருக்கு வந்து சேரும்.
அவர்வருக்கென்று உரிய இணைய பக்கத்திற்குச் சென்று பார்க்கும் போது மின்நுகர்வோர் கொடுத்த புகார் படிவம் தோன்றும். புகாரை உரிய மேற்பார்வைப்பொறியாளர் மின் பகிர்மான வட்டத்திற்கு அனுப்பி வைப்பார்.
மேற்பார்வைப் பொறியாளர் அவருக்கென்று உரிய இணைய பக்கத்திற்குச் சென்றுபார்க்கும் போது மேற்படி புகார் படிவம் தோன்றும். மேற்பார்வைப் பொறியாளர்அப்புகார் மீது உரியநடவடிக்கை எடுத்த பின்பு தன்னுடைய பதிலை இணையத்தின்மூலமாக தலைமை மக்கள் தொடர்பு அலுவலருக்கு அனுப்பி வைப்பார்.
இதை மின்னஞ்சல் முகவரி உள்ள மின் நுகர்வோர்களுக்கு இணையத்தின்மூலமாகவும், மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களுக்கு தபால் மூலமாகவும் பதில்அனுப்பி வைப்பார்.
தமிழக அரசின் மின்னணு ஆட்சி முறை (ஈ-கவர்னென்ஸ்) செயல் திட்டத்திற்கு இந்ததிட்டம் ஒரு முன்னோடியாக அமையும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications