என்.ஆர்.ஐகளிடமிருந்து 5 பில்லியன் டாலர் திரட்ட ஸ்டேட் வங்கி திட்டம்
மும்பை:
பாரத ஸ்டேட் வங்கி இந்தியன் மில்லினியம் டெபாசிட் என்ற பெயரில் அயல் நாட்டுஇந்தியர்களிடமிருந்து (என்.ஆர்.ஐ.)நிதி திரட்டுகிறது. தனது நிதி நிலைமையை பலப்படுத்திகொள்ளும் முயற்சியாக இந்த நிதியைத் திரட்டுகிறது.
இந்தியாவில் உள்ள பெரிய வங்கிகளிலேயே மிகப் பெரியது பாரத ஸ்டேட் வங்கி. இந்த வங்கிஅக்டோபர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதி இந்தியன் மில்லினியம் டெபாசிட் என்றபெயரில் 10 நாட்களுக்கு வெளிநாட்டு இந்தியர்களிடமிருந்து நிதி திரட்டுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் 5 பில்லியன் டாலர் அளவுக்கு டெபாசிட்பெற முடியும் என நம்பிக்கைதெரிவிக்கிறது வங்கி.
இந்த திட்டத்தில் டாலர்கள் மூலம் பங்குகள் வாங்குபவர்களுக்கு 8.5 சதவீத வட்டியும், பவுண்ட்கள்மூலம் பங்குகளை வாங்குவோருக்கு 7.85 சதவீத வட்டியும், யூரோ காயினுக்கு 6.85 சதவிகிதவட்டியும் வழங்கப்படும். இந்த திட்டதின் கீழ் செலுத்தப்படும் பணத்திற்கான வட்டி ஆறு மாதத்திற்குஒரு முறை வழங்கப்படும் அல்லது மொத்தமாக டெபாசிட் காலமான 5 ஆண்டு காலம் முடியும்போது வாங்கிக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் அயல்நாட்டில் வாழும் இந்தியர்கள் தனியாகவோ அல்லது அயல் நாட்டில் வாழும்வேறு ஒரு இந்தியருடனோ இணைந்து பணம் சேலுத்தலாம். அல்லது இந்தியாவில் வாழும்இந்தியரை இரண்டாவது பெயராக கொண்டும் பணம் செலுத்தலாம். இந்த வைப்பு நிதிப் பத்திரத்தைஇந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு பரிசாக வழங்கலாம்.
இந்த திட்டத்தின் முலம் பெறும் வட்டிக்கு வருமான வரி மற்றும் சொத்து வரியிலிருந்து விலக்குஅளிக்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் கடன் பெறும் வசதியும் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெறும்பத்திரத்தின் காலம் 5 ஆண்டுகள்.ஆனால் வாடிக்கையாளர் விரும்பினால் குறிப்பிட்ட காலம் முடியும்முன்னரே கணக்கை முடித்துக் கொண்டு பணத்தை பெற முடியும்.இதற்கு எந்த விதமான அபராதத்தொகையும் வசூலிக்கப்பட மாட்டாது.
இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்படும் பணம் பொருளாதார சீரமைப்புக்காக செலவிடப்படும். பாரதஸ்டேட் வங்கி பொருளாதார சீரமைப்புப் பணிகளை துவக்கி செயல்பட்டு வருகிறது என வங்கியின்அறிக்கை தெரிவிக்கிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications