தாயைக் கொன்ற போலிச் சாமியாருக்கு 2 ஆயுள் தண்டனை
திண்டுக்கல்:
தனது தாய், மாமனார் ஆகியோரைக் கொன்று திண்டுக்கல்லைக் கலக்கிய போலீச் சாமியார் வேலுச்சாமி சிறையில்தள்ளப்பட்டான். அவனுக்கு இரு ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே களத்தூரைச் சேர்ந்தவர் இந்த வேலுச்சாமி. இவர் தீடீரென ஒரு நாள்சாமி ஆனார். நெற்றியில் பட்டையும், கழுத்தில் கொட்டையுமாக கிளம்பிய இவர் தனது தோட்டத்திலேயேஆசிரமம் அமைத்தார்.
பலருக்கு குறி சொன்னார். உங்கள் வீட்டில் புதையல் இருக்கிறது. ஸ்பெஷல் பூஜை செய்தால் புதையல் கிடைக்கும்என்றெல்லாம் கதை விட்டார். இதை நம்பவும் அவர் சொன்ன பூஜைகளைச் செய்யவும் பல கிராம மக்கள் தயாாகஇருந்தனர். இதையடுத்து இவர் நடத்திய பூஜைகளில் எல்லாம் கூட்டம் கூட்டமாக மக்கள் கலந்து கொண்டனர்.
கொஞ்சம் கொஞ்சமாக நிர்வாண பூஜைகளும் நடத்தத் தொடங்கினார். ஆண், பெண் இருவரையுமே ஆடைகளைக்களையச் செய்து பூஜை என்ற பெயரில் ரசித்து வந்தார்.
இந் நிலையில் தனது தாயார் லட்சுமிக்கும் தனது மாமியார் கரியலக் கவுண்டருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாகஇந்த நிர்வாணச் சாமியாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பெற்ற தாயையும், மாமனாரையும் வெட்டிக்கொன்றார் வேலுச்சாமி சாமியார்.
அவர்களின் பிணங்களை தனது ஆசிரமம் அமைந்துள்ள தோட்டத்திலேயே புதைத்தார். பின்னர் தனதுஉதவியாளராக வந்த ராமன் என்பவரையும் கொலை செய்து தோட்டத்திலேயே புதைத்தார்.
வேலுச்சாமியின் தாயார், மாமியார், ராமன் ஆகியோர் திடீரென காணாமல் போனது பலருக்கும் சந்தேகத்தைக்கிளப்பியது. இது தொடர்பாக போலீசார் வேலுச்சாமியை நன்றாக கவனித்து விசாரித்தபோது அவர்உண்மையைக் கக்கினார்.
ஆசிரமத்திஸ் இருந்த பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. வழக்கின் தீவிரத்தை உணர்ந்து விசாரணையைசி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றியது தமிழக அரசு. அவர்கள் விசாரணை நடத்தி வேலுச்சாமி மீது திண்டுக்கல்செசஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த போலிச் சாமியாருக்கு 2 ஆயுள் தண்டனைகள் வழங்கிநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications