நாளை கூடுகிறது அ.தி.மு.க. பொதுக்குழு
சென்னை:
பரபரப்பான சூழ்நிலையில் அதி.மு,க. பொதுக்குழு 24-ம் தேதி சென்னையில்கூடுகிறது.
கடந்த 6 மாதத்தில் 65 மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், சசிகலாவுக்கு பொதுக்குழுஉறுப்பினர் பதவி என்று அதிரடியாக தாம் எடுத்த நடவடிக்கைகளுக்குபொதுக்குழுவில் ஒப்புதல் பெறுகிறார் ஜெயலலிதா.
பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய் கிழமை வடபழனி விஜயசேஷ மகாலில்நடைபெறுகிறது. அவைத் தலைவர் காளிமுத்து தலைமை வகிக்கிறார். ஜெயலலிதாசிறப்புரை ஆற்றுகிறார்.
சட்டசபை தேர்தலுக்கு முன் கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என்றசூழ்நிலையில் நடைபெறுகிற பொதுக்குழு கூட்டமாக இது இருப்பதால் முக்கியத்துவம்வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பலதரப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களையும் திறந்த மனதுடன் பேச அனுமதித்து,அவர்களின் கருத்தை அறிய ஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தனது உடன் பிறவா உயிர்த் தோழி சசிகலாவுக்கு பொதுக்குழு உறுப்பினர்பதவி தந்துள்ளார் ஜெயலலிதா. எனவே கட்சிப் பொதுக்குழுவில் அவர் முதல்முறையாக கலந்து கொள்கிறார். அவருக்கு கட்சியில் முக்கிய பதவி தருவது குறித்தும்பொதுக்குழுவில் முடிவெடுக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
டான்சி நில ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனைவிதிக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட முடியுமா முடியாதா என்ற புதிரான நிலைஏற்பட்டுள்ளது. இதனால் கட்சி அடிமட்டத் தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
அந்த நிலையை போக்க அடிமட்டத் தொண்டர்களின் அபிமானத்தை பெற்ற மாஜிக்கள்சிலருக்கு மீண்டும் மரியாதை அளிக்க ஜெயலலிதா தீர்மானித்துள்ளார்.
கட்சி பொதுச்செயலாளர் என்ற முறையில் கடந்த 6 மாதத்தில் 65 மாவட்டச்செயலாளர்களை மாற்றியுள்ளார் ஜெயலலிதா. இவர்களில் 30 பேர் தேர்தல் மூலம்தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
இவர்களை மாற்றியதற்கு ஜெயலலிதா பொதுக்குழுவின் ஒப்புதலை பெற்றாகவேண்டும். அதோடு கட்சியில் இந்த அதிரடி நடவடிக்கைகளை தொடர தனக்குஅதிகாரம் அளிக்கும் தீர்மானத்தையும் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளார் ஜெயலலிதா.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications