For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதீய ஜனதாவின் தாமரை ரத யாத்திரை

By Staff
Google Oneindia Tamil News

ஊட்டி:

தமிழகத்தில் பாரதீய ஜனதாக் கட்சியின் சின்னத்தை பிரபலப்படுத்துவதற்காக தாமரை ரத யாத்திரையை நடத்தமாநில பாரதீய ஜனதாக் கட்சி முடிவு செய்துள்ளது என்று கட்சியின் பொதுச் செயலாளர் இல. கணேசன்கூறியுள்ளார்.

பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில பொதுச் செயலர் இல. கணேசன் ஊட்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:

பாரதிய ஜனதா மற்றும் தி.மு.க. ஆகிய கட்சிகள் ஒரே கூட்டணியில் இடம் பெற்றுள்ளதை இந்து முன்னணித்தலைவர் ராமகோபாலன் நன்கு அறிவார். பாரதீய ஜனதா அரசுக்குத் தி.மு.க. ஆதரவு அளித்து வருகிறது.

தி.மு.க.வை இந்து முன்னணி விமர்சித்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை. அப்படிப் பேசியதற்கு இந்துமுன்னணி மனதளவில் காயம்பட்டிருக்கலாம். எனவே, இந்தப் பாதிப்பைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.நேரடியாக இரு தலைவர்களும் அமர்ந்து பேச நான் தூது செல்லத் தயாராக இருக்கிறேன். இந்தப் பிரச்னை வரும்சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு தீர்ந்து விடும்.

வாஜ்பாய் அரசு கடந்த காலங்களில் தமிழகத்திற்கு அதிகபட்ச நன்மைகளைச் செய்துள்ளது. இந்த அரசு பதவி ஏற்றபிறகு, கிடப்பில் கிடந்த பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சேது சமுத்திரத் திட்டம், குளச்சல் துறைமுகத்திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு கொள்கை அளவில் ஏற்று செயல்படுத்த முடிவு செய்துள்ளதே பெரும்முன்னேற்றம்தான்.

ஆளும் கூட்டணியில் இருந்து கொண்டே அரசைக் குறை கூறுவது துரதிர்ஷ்டவசமானதே. ஆளும் கூட்டணிக்குள்இருக்கும் கட்சிகளிடையே உள்ள பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நமது நாட்டில் வருங்காலத்தில் மத ரீதியான கலவரமோ, மோதலோ வர முடியாது. ஆர்.எஸ்.எஸ்சைப்பொருத்தவரை இந்து உணர்வுடன் செயல்பட்டு வரும் இயக்கமாக இருந்து வருகிறது. ஆனால், பாரதிய ஜனதாக்கட்சி என்பது தேசிய உணர்வுடன் செயல்படக் கூடியது. எனவே, எந்த வகையிலும் தேசிய நலனிலோ, ஜாதி, மதஉணர்வுகளிலோ பாரதிய ஜனதாக் கட்சி பாரபட்சம் காட்டாது.

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலிலோ, எதிர்காலத்திலோ எந்த ஜாதிக் கட்சிகளுடனும் பா.ஜ.க. ஒட்டோ,உறவோ வைத்துக் கொள்ளாது.

ராஜ்குமார் கடத்தல் குறித்து அவரது குடும்பத்தினர் தான் கருத்துச் சொல்ல வேண்டும். அவருக்கு இருந்தஅச்சுறுத்தல் குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். பாதுகாப்பைப் புறக்கணித்தவர் ராஜ்குமார் தான்.எனவே, ராஜ்குமார் கடத்தல் பற்றி அரசியல் கட்சிகள் கருத்துக் கூறுவது சரியாகாது.

ராஜ்குமாரை மீட்க நெடுமாறன் தூது சென்றது வீரப்பனின் வேண்டுகேளின்படி தான். தற்போது முத்தரப்புக் கூட்டம்நடந்தாலும், கோர்ட்டுக்கும் காட்டுக்கும் சண்டை நடந்து கொண்டுதான் உள்ளது.

எச்.பி.எப். தொழிற்சாலை அரசு மூடி விடக் கூடாது. இந்தத் தொழிற்சாலையைத் தொடர்ந்து நடத்த அரசுஉடனடியாக ரூ. 290 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பாரதிய ஜனதாக் கட்சியின் சின்னத்தை மக்களுக்களிடையே பிரபலப்படுத்த தாமரை ரத யாத்திரை நடத்தப்படும்.நவம்பர் 13-ம் தேதி கூடலூர் அருகே உள்ள எருமாட்டில் ரத யாத்திரை தொடங்கும்.

கோவை, ஈரோடு, சேலம் வழியாக டிசம்பர் 21-ம் தேதி திருச்சியில் இது முடிகிறது. யாத்திரையை மாநிலத் தலைவர்கிருபாநிதி தொடங்கி வைக்கிறார் என்று இல. கணேசன் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X