தீயிலிருந்து தப்பிய காரமடை கோவில் தேர்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை காரமடையில் உள்ள அரங்கநாதர் கோயில் தேர் பெரும் தீ விபத்திலிருந்துதப்பியது.
கோவை மேட்டுப்பாளையம் அருகே அரங்கநாதர் கோயில் உள்ளது. இங்கு சுமார் 40அடி உயர தேர் உள்ளது.
இந்த தேர் புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில் உலா வரும். மற்ற மாதங்களில்பத்திரமாக நிறுத்தப்பட்டிருக்கும்.
மழையில் தேர் நனைந்து விடாமல் பாதுகாக்க தகடுகளால் ஆன சுற்றுப் பகுதியும்,ஓலையிலான கூரையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை தேரின் மேல் பகுதியில் உள்ள கூரையில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.
இதனைக் கண்ட பொதுமக்கள் தீவிரமாக செயல்பட்டு கூரையில் ஏற்பட்ட தீயை பரவவிடமால் அணைத்தனர். இதனால் பழமையான தேர் காப்பாற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications