For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரு கேட்சுகளை கோட்டைவிட்டதே தோல்விக்குக் காரணம் - கங்குலி

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

ஷார்ஜா கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கையிடம் மோசமாகத்தோற்றதற்கு இரு கேட்சுகளைக் கோட்டைவிட்டதே முக்கிய காரணம் என்று இந்தியஅணியின் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

ஷார்ஜா போட்டியில் கலந்து கொண்டுவிட்டு திங்கள்கிழமை காலை இந்திய அணிமும்பை திரும்பியது. அதன் பிறகு நிருபர்களிடம் கங்குலி கூறியதாவது:

போதுமான அனுபவமின்மையும், இரு கேட்சுகளைக் கோட்டைவிட்டதும்தான்இலங்கையிடம் தோற்றதற்கு முக்கிய காரணங்களாகும். ஷார்ஜா போட்டியில்மோசமாக இந்திய அணி மோசமாக விளையாடியது வருத்தமாக உள்ளது. எந்தவிதஎதிர்ப்பும் காட்டமுடியாமல் இலங்கையிடம் தோற்க நேர்ந்தது.

திறமையற்ற பந்துவீச்சால் மட்டுமல்ல பேட்டிங்கிலும் இந்திய வீரர்கள் திறமையைக்காட்டவில்லை. இலங்கையிடம் தோற்ற நாளை எவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமோஅவ்வளவு சீக்கிரம் மறக்க விரும்புகிறேன்.

93 ரன்கள் எடுத்த நிலையில் ஜெயசூர்யா கொடுத்த கேட்சை சுனில் ஜோஷி பிடிக்கத்தவறியது நாம் தோற்றதற்கு மிகப் பெரிய காரணமாகச் சொல்லமுடியும்.இல்லையென்றால் இலங்கை அணியால் அவ்வளவு பெரிய (299 ரன்கள்) ஸ்கோரைஎட்டியிருக்க முடியாது.

இந்திய அணியின் கடைசி நிலை ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகியதற்குஅவர்கள் மீது குற்றம் சொல்லமுடியாது. ஏனெனில் அவர்களுக்குப் போதுமானஅனுபவமில்லை.

நான், டெண்டுல்கர், ராபின் சிங், பிரசாத் ஆகியோரைத் தவிர மற்றவர்களுக்கு எல்லாம்நிறைய சர்வதேச கிரிக்கெட் போட்டிகளல் விளையாடிய அனுபவமில்லை. மேலும்,இக்கட்டான நிலையில் நின்று விளையாடும் அனுபவமும் இல்லை. அதனால்தான்அவர்கள் விரைவில் அவுட்டாகிவிடுகின்றனர்.

ஆனால், இப்போதைய இந்திய அணி மிகவும் நல்ல அணி. புதிய இளம் வீரர்கள் அதிகநம்பிக்கையைத் தரும் விதத்தில் விளையாடியுள்ளனர். பேட்டிங்கில் யுவராஜ் சிங்கும்,பந்துவீச்சில் ஸாகிர் கானும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

அத்தகைய இளம் வீரர்களுக்கும் அணி தேர்வாளர்கள் மீண்டும் வாய்ப்புத்தரவேண்டும். இந்திய அணிக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளர் நியமிப்பது குறித்து கருத்து ஏதும்தெரிவிக்க விரும்பவில்லை. பயிற்சியாளருடைய பணி மைதானத்துக்கு வெளியேமுடிந்து விடுகிறது. மற்றபடி மைதானத்துக்குள் திறமையைக் காட்டவேண்டியதுவீரர்களின் பணி.

என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்தான் சிறந்தது. ஒருநாள் கிரிக்கெட்எனபது எளிதானது, வேகமானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வீரர் சிறப்பாகவிளையாடினால், அவரால் ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக விளையாட முடியும்என்றார் கங்குலி.

ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்வளவு அதிக ரன்கள் வித்தியாசத்தில் எந்த அணியும்தோற்றதில்லை. மேலும், ஒரு நாள் போட்டியில் இந்தியா எடுத்த மிகக் குறைந்தஸ்கோரும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X