சமயத்தின் சாபக்கேடுகள் போலிச் சாமியார்கள் ..
சென்னை:
சமயத்திற்கே சாபக்கேடுகளாக விளங்குபவர்கள் போலிச் சாமியார்கள் என்று தமிழக சட்டமன்ற சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் என்றார்.
திமுகவில் இருந்தாலும் பழுத்த ஆன்மீகவாதியாக வாழ்பவர் பழனிவேல்ராஜன். கட்சியின் கடவுள் மறுப்புக் கொள்கையை புறந்தள்ளி விட்டு நெற்றிநிறைய விபூதி, குங்குமத்துடன் சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து, முதல்வர் கருணாநிதி முன்னிலையில் சட்டமன்றத்தை நடத்துபவர்.
திமுகவில் சமயப் பற்றுள்ள பலரை கடுமையாக விமர்சித்துள்ள கருணாநிதி, பழனிவேல்ராஜன் விஷயத்தில் மட்டும் கண்டு கொள்வதில்லை. இதனால்கோவில் விழாக்களில் தவறாமல் கலந்து கொள்கிறார் பழனிவேல்ராஜன்.
பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழாவும், திருப்பணிக்குழுத் தலைவர் மகாலிங்கத்திற்கு பாராட்டு விழாவும்நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் பழனிவேல்ராஜன் பேசுகையில், நம்நாட்டில் போலிச் சாமியார்களின் நடமாட்டம் அதிகமாகி உள்ளது.இதனால் நமது சமயத்திற்கே இவர்கள் ஒரு சாபக்கேடாக விளங்குகிறார்கள்.
அண்ணா முதல்வரவாக இருந்தபோது அவரது நண்பர் ஒருவர் நாத்திகராக இருந்தார். அவர் மதுரையை சேர்ந்தவர். அவரை பழநி கோவிலுக்குஅறங்காவலர் குழுவில் அண்ணா நியமித்தார். நாத்திகராக இருந்த அவர் ஆத்திகராகவே மாறி விட்டார். ஆத்திகம், நாத்திகம் அவரவர் மனதைப்பொறுத்தது. ஆத்திகத்தின் கடைசி எல்லை தான் நாத்திகம் என்று நமது சித்தாந்தம் கூறுகிறது என்றார் அவர்.
முன்னதாக எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன் பேசுகையில், இறைவனின் திருப்புகழைப் பாட பொன்னோ, பொருளோ தேவையில்லை.இனிமையான சொற்களே போதும் என 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் கூறியுள்ளார். மனிதனால் கண்டுபிடிக்க முடியாத இடத்தில்கடவுள் உள்ளார். அதேபோல் விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்க முடியாதது தான் கடவுள் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications