உ.பி.யில் விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுகள் ஊடுறுவலா?
லக்னோ:
பிரபல அரசியல் தலைவர்களைக் கொல்வதற்காக விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படையினர் உத்திரப் பிரதேச மாநிலத்துக்குள் ஊடுருவியிருப்பதாக அம் மாநிலஅரசுக்கு மத்தியஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புலிகளின் தற்கொலைப் படையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 2 பேர்மாநிலத்துக்குள் ஊடுருவியிருப்பதாக உளவுப்பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகவே, மாநிலத்தில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும், குறிப்பாகஅரசியல் தலைவர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தும்படியும் உ.பி. மாநில அரசைமத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அரசியல் தலைவர்களை தற்கொலைப் படையினர் கொல்ல புலிகள் சதித் திட்டம்தீட்டியுள்ளபோதிலும், எந்த அரசியல் தலைவர்களை அவர்கள் குறி வைத்துள்ளனர்என்பது தெரியவில்லை என்று உ.பி. அரசுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள எச்சரிக்கைதகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலைப் படையைச் சேர்ந்த ஜீவா மற்றும் சீலன் ஆகியோர் மூலம் இச் சதித்திட்டத்தை நிறைவேற்றி முடிக்கும் பணியை ஹாங்காங்கில் உள்ள ராதா என்ற நபர்மேற்கொண்டுள்ளதாக உளவுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் ஜீவா பிரான்ஸிலும், சீலன் பாங்காக்கிலும் உள்ளனர். சதித் திட்டத்தைநிறைவேற்றி முடித்தவுடன் தனித்தனியாக சென்னைக்கு வந்து சேரும்படி ஜீவாவுக்கும்,சீலனுக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஜீவா பிரான்ஸ் நாட்டு பாஸ்போர்டும், சீலன் இந்திய பாஸ்போர்டும்வைத்திருப்பார்கள். இவற்றைத் தவிர ஜீவா மற்றும் சீலன் இருவரைப் பற்றி வேறுதகவல்கள் ஏதும் இல்லை. அவர்களுடைய புகைப்படங்களும் கிடைக்கவில்லை.
ஆகவே, மாநில அரசு அதிக கவனத்துடன் செயல்படவேண்டும். அரசியல்தலைவர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும் என்ற உத்திரப் பிரதேசஅரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications