வீரப்பன் கூட்டாளி துப்பாக்கியுடன் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை:

சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் துப்பாக்கியுடன் திரிந்த வீரப்பன் கூட்டாளியைச்சுற்றி வைத்துப் பிடித்து வனத்துறையினர் கைது செய்தனர்.

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தையொட்டி அதிரடிப்படையினர்தற்காலிகமாக தங்களது நடவடிக்கைகளை நறுத்தி வைத்துள்ளனர். இந்தசந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சில இடங்களில் வன விலங்குவேட்டைகளில் சமூ-க விரோதக் கும்பல் ஈடுபட்டு வருவதாக வனத்துறையினருக்குத்தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனத்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கெம்மனைக்கன்பாளையம் என்ற இடத்தில் இவர்கள் ரோந்து சென்றபோதுதுப்பாக்கியுடன் ஒருவர் நடமாடுவதை வனத்துறையினர் கண்டு பிடித்தன.

இவர் வனத்துறையினரைப் பார்த்தவுடன் புதரில் சென்று பதுங்கியுள்ளார். இதையடுத்துசந்தேகம் வலுக்கவே வனத்துறையினர் அவரைப் பிடிக்கும் நோக்கத்துடன் சுற்றிவளைத்தனர். பின்னர் அவரைப் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் பெயர் ரங்கசாமி எனத் தெரிய வந்தது. இவர் துப்பாக்கி ரங்கன்என்றழைக்கப்பட்டு வந்தார். வீரப்பனின் கூட்டாளியாக இவர் இருந்து வருகிறார்.

வீரப்பனுக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு இவர் மிகவும் உதவியாகஇருந்து வருவதும், அதிரடிப்படையினர் நடமாட்டம், வனத்துறையினர் கண்காணிப்புபற்றியும் அவ்வப்போது தகவல் கொடுத்து வந்துள்ளார்.

இவரை வனத்துறையினர் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்செய்தனர். மாஜிஸ்திரேட் இவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+